|
| கார்த்திக் அனிதா |
டாம் அண்ட் ஜெர்ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை.
கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை தட்டிக் கேளுடா என்கிறாள் அனிதா. இதோ என்று பாய்ந்து போகிறவன், கலாய்க்கிறதுக்கு இந்த சப்பை மூஞ்சிதான் கிடைச்சதா என்று சேம் சைடு கோல்போட ஜிவ்வாகிறது ஏரியா.
இதே ஸ்டைலில், எனக்கு மாப்ள பார்க்கிறாங்கடா என வருத்தப்படுகிறவளிடம், ஆத்தா என்னை காப்பாத்திட்ட என்று வெறுப்பேற்றுகிறான் கார்த்திக். விதி வலியது. அனிதாவுக்கு திருமணம் நிச்சயமான பிறகு அவனே வருத்தப்படும்படி ஆகிறது. திருமண தேதி நெருங்க நெருங்க இருவருக்குள்ளும் காதல் கரைபுரளுகிறது. சில கண்ணாமூச்சிகளுக்குப் பிறகு காதல் ஜோடி என்னாகிறது என்பதுடன் சுபம்.
புதுமுகம் ரத்தனும், மஞ்சுவும் குறும்பு ஏரியாவில் தித்திக்கும் கரும்பு. அப்பா இறந்த பிறகு மஞ்சுவின் வீட்டில் கூச்சத்துடன் சாப்பிடும் காட்சியில் ரத்தனிடம் சத்தான நடிப்பு. இவரா நாயகி என்று கேட்கத் தோன்றும் முகம் மஞ்சுவுக்கு. பார்க்கப் பார்க்க பிடித்துப் போவது அவரின் பிளஸ்.
உறுமிக் கொண்டிருக்கும் கோட்டா சீனிவாசராவையும், ராஜன் பி.தேவையும் பக்கா ஜென்டில்மேனாக காட்டியதற்காகவே இயக்குனருக்கு தரலாம் ஒரு பொக்கே. பாசக்கார அப்பாக்களாக கலக்கியிருக்கிறார்கள் இருவரும்.
பத்து ரூபாய் நோட்டில் ரத்தன் தனது காதலை எழுதி வைப்பதெல்லாம் அரதப் பழசு ஐடியா. மகனின் காதல் கைகூடாமல் போனதற்கு அப்பா மரணமடைவது திணிக்கப்பட்ட சோகம். ஜாக் ஆனந்தின் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. சிங்கமுத்துவின் ஆள் மாறாட்ட அப்பா காமெடிக்கு திரையரங்கு குலுங்குகிறது.
மென்மையான காதலை சொன்னதில் முக்கால் கிணறு தாண்டியிருக்கிறார் இயக்குனர். அவ்வப்போது தொய்ந்து போகும் திரைக்கதையும், 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை நினைவுப்படுத்தும் காட்சிகளும் இயக்குனரால் தாண்ட முடியாத மீதி கிணறு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - ஈழத் தமிழர்களை கொன்ற மாபாதகத்திற்கு முழு காரணமான காங்கிரசையும், தி.மு.க.வையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | பட்டாளம் - விமர்சனம் | | பள்ளி மாணவர்களின் துள்ளித் திரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|