யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான். பாட்டு முடியும்போது நாயகிக்கு நினைவு திரும்புகிறது. யெஸ், ஷீ இஸ் ஆல் ரைட்.

அடடா என்ன அழகு படத்தில் வரும் இந்தக் காட்சி ஒரு சோறு பதம்.காட்சிகள் இருக்கட்டும், கதை?

ஒரே கல்லூ‌ரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள்.இந்நிலையில் ஒரு கும்பல் நாயகியை கடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்து விடுகிறார் நாயகி. இதன் பிறகு வருவது நாம் மேலே பார்த்த வித்தியாசமான இதுவரை திரையில் பார்த்திராத அந்த பாட்டு சிகிச்சை. நாயகனின் தந்தை, மகன் நாயகியை காதலிப்பதை அறிந்து நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார்.

இப்போது வில்லன் என்ட‌ர்.நாயகியின் அப்பா ஒரு மத்திய அமைச்சர்.காதலுக்கு அவர் சிவப்பு விளக்கு காட்டுகிறார். அப்புறமென்ன... அடிதடி இறுதியில் சுபம்.

ஆகாஷ் ஜெய் படத்தின் நாயகன். அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. நாயகி நிக்கோல் காஸ்ட்யூமை கம்மிப் பண்ணினாலே சமாளித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்.ஆகாஷின் அப்பாவாக சரத்பாபு.நல்ல மனம்படைத்த மனநல மருத்துவராக ஜமாய்க்கிறார்.அம்மாவாக வரும் ரேகாவுக்கு வேலையே இல்லை.

ஆசிஷ்வித்யார்த்தி வழக்கமான ஹிஸ்டீ‌ரியா வில்லன். ரவுடிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதும்போது மத்திய அமைச்சரா இல்லை மத்திய சென்னை ரவுடியா என திகைக்க வைக்கிறார்.அரத பழசு கதையிலும் அழகாக காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது கிச்சாவின் கேமரா.மொத்தம் ஏழு பாடல்கள்.சில கேட்கிற மாதி‌ரி இருப்பது ஆச்ச‌ரியம்.

கருணாஸின் கடி காமெடி சில நேரம் சி‌ரிக்கவும் வைக்கிறது. நிக்கோலை மானபங்கப்படுத்த பாதுகாப்பு வீரரே அவர் மீது பாய்வதெல்லாம் காதுல பூ..

படம் முடிந்த பிறகு பெருமூச்சுதான் வருகிறது, அடடா என்ன அவஸ்தை !
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஞ்சிவரம் - விமர்சனம்
1977 - விமர்சனம்
யாவரும் நலம் - விமர்சனம்
தீ – விமர்சனம்
சிவா மனசுல சக்தி - விமர்சனம்
வெண்ணிலா கபடி குழு- விமர்சனம்
செய்திகள்
தமிழகம் - விடை‌த்தா‌ள் ‌திரு‌த்து‌ம் ப‌ணி‌யி‌ல் கவன‌க்குறைவாக‌ச் செய‌ல்ப‌ட்ட த‌னியா‌ர் பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் 10 ‌வி‌ரி‌வுரையாள‌ர்களை ப‌ணி‌நீ‌க்க‌ம் செ‌ய்ய அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌ம் நடவடி‌க்கை எடு‌த்து‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காஞ்சிவரம் - விமர்சனம்
பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்...
1977 - விமர்சனம்
யாவரும் நலம் - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...
மேலும் படிக்க|மேலும்...