|
| சிவா மனசுல சக்தி - விமர்சனம் |
எந்தப் படத்துக்கும் பயன்படுத்தலாம் போல அல்லது பயன்படுத்தியதைப் போல பாடல் காட்சிகள். மகரந்த மழை பொழிந்தாய் என்று ஒருவரி வருகிறது. பாடலுக்கு சென்சார் கிடையாதோ? கேமராவைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை.
படத்தின் கமர்ஷியல் வெற்றியை தீர்மானிப்பது வசனங்கள். குசும்பு தெறிக்கும் வரிகள் படம் நெடுகிலும் கும்மியடிக்கின்றன. ஒல்லியாக, உயரமுடன் இருக்கும் சக்தியின் நண்பனை பற்றிய சந்தானத்தின் கமெண்ட், 'டைபாய்டு வந்த பனை மரம் மாதிரி இருப்பானே...'
ஆர்யாவிடம் (ஆமாம், படத்தில் ஒரேயொரு காட்சியில் தேவையில்லாமல் அவரும் வருகிறார்) சக்திக்குப் பிடித்தது, பிடிக்காதது பற்றி சிவா கூறுகிறான். அதை கேட்ட பிறகு கண்ணீருடன் சிவாவை தேடி வருகிறாள் சக்தி. கொரிய படமான மை சாஸி கேர்ள் இயக்குனரை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறது.
சிவாவாக ஜீவாவும், சக்தியாக அனுயாவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் காலை வாருவதும், கலாய்ப்பதும், முட்டாளாக்குவதுமாக நகைச்சுவையாக படம் நகர்கிறது. இது படத்தின் ப்ளஸ். மைனஸ்? முட்டாளாக்கப்பட்டது அவர்களல்ல, அவர்கள் மூலமாக நாம் என்ற உண்மை படம் முடிந்து விளக்குகள் பிரகாசிக்க தொடங்கும்போதே தெரிந்து விடுகிறது.
எஸ்எம்எஸ் - குறுஞ் செய்தியாக அனுப்ப வேண்டியதை பிலிம் செலவு செய்து படமாக்கியிருக்கிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - முல்லைத் தீவுப் பகுதியில் குண்டு வீச வந்த இலங்கை விமானப் படையின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளே இதனை வீழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது... |
| |
|
|
|
|
 | | | வெண்ணிலா கபடி குழு- விமர்சனம் | | தமிழ் சினிமாவுக்கே உரித்தான வழக்கமான அடிதடி சண்டை, குத்தாட்டத்துடன் கூடிய பாடல் என இல்லாமல் மாறுபட்டு வெளி வந்துள்ளது, 'வெண்ணிலா கபடி குழு'... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள். அவற்றை ஒதுக்கித் தள்ளாமல் சாப்பிட வேண்டும்... |
| |
|
|
|
|
|
|