|
| சிவா மனசுல சக்தி - விமர்சனம் |
சிவா மனசுல சக்தி - சுருக்கமாக எஸ்எம்எஸ். படத்தின் முதல் காட்சி. ஓடிவந்து புகைவண்டியில் ஏறுகிறான் நாயகன். எதிரே நாயகி. கையில் ஆனந்த விகடன். டொட்டடாய்ங்... தயாரிப்பு விகடன் டாக்கீஸ். நாயகன் பெயர் சிவா. நாயகி பெயர் சக்தி. மீதமிருப்பது மனசுல. அதுதான் படத்தின் கதை.
கதை என்ன புடலங்காய். விடிந்தால் கொரியர் வேலை, விழுந்தால் டாஸ்மாக். வேலையும் போதையுமாக திரியும் சிவாவை விழுந்து விழுந்து காதலிக்கிறார் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் சக்தி. காதல் தாளாமல் டாஸ்மாக்குக்கே சென்று ஐ லவ் யூ சொல்கிறார். கல்யாணத்துக்கு முன் கட்டிலையும் பகிர்ந்து கொள்கிறார்.
இந்தளவு அவர் காதலிக்க என்ன காரணம்? சக்தியே சொல்கிறார். சிவாதான் அவரை ஒருமையில் அழைக்கிறானாம். அவனை சந்தித்தப் பிறகுதான் மனம்விட்டு சிரிக்கிறாளாம்.
முன்பின் தெரியாத ஒருவனிடம் ஏர்ஹோஸ்டஸாக இருக்கிறேன் என்று சொல்லி சுத்தலில்விடும் சக்திக்கு மனம்விட்டு சிரிக்க முடியாத சோகம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
சரி, சிவா எப்படி சக்தியை சிரிக்க வைக்கிறான்? கொரியர் டெலிவரி பாயாக இருந்து கொண்டு ஆர்மி ஆபிசர் என்கிறான். சக்தியை கலாய்க்க அவளது அப்பா இருக்கும்போது அவளுக்கு கொரியரில் மதுபாட்டில்கள் டெலிவரி செய்கிறான். சக்தி பணிபுரியும் அலுவலகத்துக்கு போதையில் வந்து அவளது நண்பர்களை அடிக்கிறான். அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்து சிகரெட் புகையை அவள் மூஞ்சியில் ஊதுகிறான். சிரிக்க, நேசிக்க இதுபோதாதா?
சக்தியும் சாமானிய ஆளில்லை. நியூட்டனின் மூன்றாவது விதியை மெய்ப்பிக்கும் கலாய்ப்பு பார்ட்டி. ஆஊ என்றால் சிவாவின் வீட்டுக்கு மிட்நைட்டில் என்ட்ரி ஆகிறார். காந்தி இருந்திருந்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்திருப்பார். பாடல் காட்சியில் கர்ச்சீப் சைசில் ஒரு டவுசரை சக்திக்கு கொடுத்திருக்கிறார்கள்.கொழு கொழு மொழு மொழு.
சந்தானம் வழக்கம்போல் சிங்கிள், டபுள் மீனிங்கில் சிரிக்க வைக்கிறார்.அவர் வைத்திருக்கும் காஸ்ட்லி மொபைல்களை கோபம் வரும் போதெல்லாம் பொசுக்கென்று எடுத்து வெடுக்கென்று உடைக்கிறான் நாயகன்.அம்பானிகள்கூட இத்தனை மொபைல்களை உடைத்திருக்க மாட்டார்கள்.
நாயகன், நாயகி கதைதான் லூசு என்றால், நாயகனின் அம்மாவாக வரும் ஊர்வசி அதைவிட லொட லொடா. மகன் டாவடிக்கும் பிகரை பார்க்க குடும்பம் சகிதம் கிளம்பிச் செல்கிறார். சும்மா தொண தொணக்காமல் இருக்கியா என அவரிடம் ஒருமுறை சிவா சொல்கிறான். திரையரங்கில் விசில். அவர்களும் ரொம்ப நேரமாக அதைத்தானே கேட்க நினைத்தார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - முல்லைத் தீவுப் பகுதியில் குண்டு வீச வந்த இலங்கை விமானப் படையின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளே இதனை வீழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது... |
| |
|
|
|
|
 | | | வெண்ணிலா கபடி குழு- விமர்சனம் | | தமிழ் சினிமாவுக்கே உரித்தான வழக்கமான அடிதடி சண்டை, குத்தாட்டத்துடன் கூடிய பாடல் என இல்லாமல் மாறுபட்டு வெளி வந்துள்ளது, 'வெண்ணிலா கபடி குழு'... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள். அவற்றை ஒதுக்கித் தள்ளாமல் சாப்பிட வேண்டும்... |
| |
|
|
|
|
|
|