|
| வெண்ணிலா கபடி குழு- விமர்சனம் |
| 14 பிப்ரவரி 2009 ( 14:56 IST ) | |
தமிழ் சினிமாவுக்கே உரித்தான வழக்கமான அடிதடி சண்டை, குத்தாட்டத்துடன் கூடிய பாடல் என இல்லாமல் மாறுபட்டு வெளி வந்துள்ளது, 'வெண்ணிலா கபடி குழு'.
கபடி விளையாட்டின் பின்னணியில் கிராமத்து இளைஞனின் வலி மிகுந்த வாழ்க்கையைச் சொல்கிறது இப்படம்.
சிறுவன் மாரியின் கபடி மீதான ஆர்வம், இளைஞனான பிறகும் குறையவில்லை. எந்தப் போட்டியிலும் ஜெயிக்காத இந்த அணிக்கு, மாநிலப் போட்டியில் அதிர்ஷ்டவசமாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அனுபவமுள்ள பயிற்சியாளரின் வழிகாட்டலில் மாரி அணி கோப்பையை கைப்பற்றுகிறது.
இந்த கபடி கதையின் ஊடாக மாரியின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. வெற்றி கிடைத்தும் அதை ருசிக்க முடியாத நிலைமை... துரதிர்ஷ்டம் துரத்தும் மாரியின் முடிவு சோகத்தின் கண்ணீர் துளி.
படமாக்கியிருக்கும் விதம், கேமரா வெளிச்சம் படாத மனிதர்கள், யதார்த்தமான கிராமத்து சூழல் ஆகியவை சுசீந்திரனை நம்பிக்கை தரும் படைப்பாளிகள் பட்டியலில் சேர்கிறது.
திருவிழாவுக்கு கிராமத்துக்கு வரும் சரண்யா மோகன் கண்களாலேயே மாரியை (விஷ்ணு) காதலிக்கும் இடம் கவிதை. முற்றுப்பெறாத அவரின் காதல், கதையின் அழுத்தத்தை கூட்டுகிறது. படத்தை நகர்த்திச் செல்வது, மாரியின் நண்பர்களின் இயல்பான நகைச்சுவை.
மாநில அளவிலான போட்டியில் போட்டி நடக்கும்போதே அணியை மாற்றுவதும், வேறு அணி வீரரை மாற்று அணியில் ஆட வைப்பதும் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
ஒவ்வொரு காட்சியும் இழுத்துக் கொண்டே செல்வது சலிப்பு தட்டுகிறது. மாரியாக வரும் புதுமுகம் விஷ்ணு, கோச்சாக வரும் கிஷோர், சரண்யா மோகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
அம்சம் லஷ்மனின் ஒளிப்பதிவு நிறைவைத் தருகிறது. கதையோடு இணைந்துவரும் பாடல்கள், பின்னணி இசை படத்தின் பலம்.
மாரியின் காதலை கபடி காட்சிகள் ஓவர்டேக் செய்து விடுவதால் படத்தின் இறுதி பத்து நிமிட கிளைமாக்ஸ் - அது படத்தின் முக்கியமான திருப்பமாக இருந்தபோதும் - ஒட்டாமல் தொக்கி நிற்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - விண்வெளியில் ரஷ்யாவின் செயலிழந்த செயற்கைக்கோள் மீது அமெரிக்காவின் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள் மோதி விபத்துக்குள்ளானது... |
| |
|
|
|
|
 | | | காதல்னா சும்மா இல்ல- விமர்சனம் | | 'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதிரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆலிவ் எண்ணெய் மார்பகப் புற்றுநோயை தடுக்கும் அருமருந்து என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பு மற்றும் கிரனடா பல்கலைக்கழகம்... |
| |
|
|
|
|
|
|