யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
காதல்னா சும்மா இல்ல- விமர்சனம்
'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்‌ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதி‌ரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின் குருட்டு அதிர்ஷ்டம்.

உலகமே நான்தான் என்று நினைக்கும் காதலன். உலகத்திற்காக‌த் தான் நான் என்று வாழும் காதலி. குணங்கள் எதிரெதிர் திசையில் இருப்பது தெ‌ரிந்ததும் காதலனை விட்டுப் பி‌ரிந்து செல்கிறார் காதலி.

Kadalna Summa Illa
WD
பி‌ரிவின் வலி உணரும் காதலன் அவளைத் தேடி புறப்படுகிறான். அந்த நெடும் பயணம், நான் என்ற அவனது அகந்தையை நாம் என்ற சிந்தையாக மாற்றுகிறது. அகந்தை களைந்த அவன் காதலியை கண்டுபிடித்தானா? காதலி அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாளா? உல்லாச பயணத்தின் உற்சாகத்துடன் பதில் சொல்கிறது, படம்.

தெலுங்கு 'காம்யம்' படத்தை தமிழ்ப் படுத்துகிறேன் என்ற வழக்கமான பார்முலாவுக்குள் படத்தை அடைக்காததற்கு முதலில் இயக்குனருக்கு சபாஷ் சொல்லியாக வேண்டும்.

சர்வானந்த் தமிழுக்கு கிடைத்திருக்கும் நல்வரவு. தனது பயணத்தின்போது ஏற்படும் சம்பவங்களிலிருந்து படிப்படியாக வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் சர்வானந்தின் பாத்திரம் புத்தரை நினைவுப்படுத்துகிறது.

கமாலினியிடம் முதல் படத்தின் பளபளப்பு மிஸ்ஸிங். நடிப்பில் குறைவில்லாத அதே மிடுக்கு. காதலனின் குணம் தெ‌ரிந்து விலகுமிடத்தில் கவனிக்க வைக்கிறார்.

சர்வானந்தின் வழித் துணையாக சேரும் ரவி கிருஷ்ணா படம் நெடுக பட்டையை கிளப்புகிறார். அவ‌ரின் டயலாக் டெலிவ‌ரி டைமிங் அபாரம். வெட்டி வேலுவாக ரசிகர்களின் மனதில் கெட்டியாக இடம்பிடிக்கிறார்.

அவருடன் எம்.எஸ். பாஸ்கர் கூட்டணி சேரும் பத்து நிமிடங்கள் திரையரங்கில் பட்டாசு சத்தம். ஹைடெசிபல் காமெடியன்கள் கவனிக்க வேண்டிய பாடம்.

மூன்று பேர் இசையமைத்திருக்கிறார்கள். முக்கனி என்று சொல்ல முடியாத சுமார் ரகம். ஒளிப்பதிவு கதையோடு இணைந்து வருவது படத்தின் மீதான ஈர்ப்பை குறையாமல் காப்பாற்றுகிறது. படத்தின் முக்கியமான பலம் வசனங்கள்.

வித்தியாசமான கதை நேர்த்தியான திரைக்கதையால் மனதில் ஒட்டிக் கொள்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
படிக்காதவன்: விமர்சனம்
வில்லு - விமர்சனம்
பஞ்சாமிர்தம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல்னா சும்மா இல்ல- விமர்சனம்
'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்‌ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதி‌ரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்...
படிக்காதவன்: விமர்சனம்
வில்லு - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - நமக்கு ஏற்படும் திடீர் அவஸ்தைகளில் ஒன்று, தலைச்சுற்றல்! தலைச் சுற்றல் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, அதை சரி செய்வது எப்படி என்பது போன்ற சந்தேகங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...