|
| படிக்காதவன்: விமர்சனம் |
| 24 ஜனவரி 2009 ( 16:07 IST ) | |
'படிக்காதவன்' என்று பெயர் வைத்ததால் லாஜிக் பற்றி எந்தக் கவலையும் படாமல், கமர்ஷியல் படத்தை எடுத்துத் தள்ளிவிட்டார் இயக்குனர்.
படித்த குடும்பத்தில் படிக்காத ஒரேயொரு கடைக்குட்டி தனுஷ். பத்தாம் வகுப்பையே தாண்டாத இவரை படுத்தியெடுக்கிறார், படித்த தந்தை பிரதாப் போத்தன். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? நண்பர்கள் டூட்டோரியல் காலேஜில் சேரச் சொல்கிறார்கள்.
ஆனால், காலேஜையே இழுத்து மூடும் அளவுக்கு அங்கே ரவுசு காட்டுகிறார் தனுஷ். படித்த பெண்ணை காதலித்து மணந்தால் தானாக கௌரவம் வந்து சேரும் என அடுத்த ஐடியா கொடுக்கிறார்கள் நண்பர்கள்.
தனுஷும் கல்லூரியில் படிக்கும் தமன்னாவை காதலிக்கிறார். தமிழ் சினிமாவின் வழமையான மோதலுக்குப் பின், தமன்னாவும் தனுஷை காதலிக்கிறார். இடைவேளை வரை இதுபோதும்.
அதற்குப் பிறகு? வருகிறார்கள் தடித்தடியாக மூன்று வில்லன்கள். ஒருவர் தமன்னாவின் அடிதடி அப்பா (சுமன்). இனனொருவர் அவரது எதிரி (சாயாஜி ஷிண்டே). மூன்றாவது அதுல் குல்கர்னி.
மூவரையும் தன்னுடைய பென்சில் தேகத்தால் துவட்டியெடுத்து காதலியின் கரம் பிடிக்கிறார் தனுஷ்.
படத்தை காப்பாற்றுவது தனுஷின் நடிப்பு. டைமிங் காமெடியும், சரவெடி ஆக்சனும் தனுஷுக்கு சரளமாக வருகிறது. தமன்னாவை இவர் ரூட் விடும் இடங்கள் கலகலப்பானவை.
தமன்னாவுக்கு அழகை காட்டும் வேடம். நடிப்பு? அடுத்தப் படத்தில்தான் பார்க்க வேண்டும். விவேக் சிரிக்க வைக்கும் அளவுக்கு சித்ரவதையும் செய்கிறார்.
தனுஷை திடீரென்று வில்லன்கள் தாக்குவதும், அவர்களின் குறி தனுஷ் அல்ல தமன்னா என தெரிய வருவதும் திரைக்கதையை விறுவிறுப்பாக்குகிறது. ஆனால், அடுத்த காட்சியிலேயே வழக்கமான பார்முலாவுக்குள் படம் செட்டாகி விடுவது ஏமாற்றம்.
சுமன், சாயாஜி ஷிண்டே, அதுல் குல்கர்னி மூவரும் வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள். சேத்தன், தேவதர்ஷினி, ஷர்மிளா ஆகியோரும் படத்தில் உண்டு.
மணி சர்மாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார். கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு. காமெடியில் ஜெயிக்கும் இயக்குனர், ஆக்சனில் கோட்டை விடுகிறார்.
மொத்தத்தில் 'படிக்காதவன்', பார்டர் மார்க்கில் பாஸாகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - வானில் உண்டாகும் அதிசய நிகழ்வுகளில் ஒன்றாக, வரும் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இதைப் பார்க்கலாம்... |
| |
|
|
|
|
 | | | வில்லு - விமர்சனம் | | விஜய் - பிரபுதேவா கூட்டணியின் உருவாகியுள்ள இரண்டாவது படம் 'வில்லு'. இந்தியில் கமர்ஷியல் ஹிட் அடித்த 'சோல்ட்ஜர்' ஐ தமிழுக்கு தகுந்தவாறு மாற்றியிருக்கிறார்கள்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - சமையலில் சுவையான காய்கறியாக பரிமாறப்படும் கேரட் பல்வேறு மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டது... |
| |
|
|
|
|
|
|
|