|
| வில்லு - விமர்சனம் | |
விஜய் - பிரபுதேவா கூட்டணியின் உருவாகியுள்ள இரண்டாவது படம் 'வில்லு'. இந்தியில் கமர்ஷியல் ஹிட் அடித்த 'சோல்ட்ஜர்' தமிழுக்கு தகுந்தவாறு மாற்றியிருக்கிறார்கள்.
தந்தை விஜய்க்கு ஏற்பட்ட அவமானத்தை மகன் விஜய் துடைத்தெறிந்து, எதிரிகளை பழிவங்குவது தான் கதை. நேர்மையான ராணுவ மேஜர் சரவணன். இவர் தங்களது தேசத்துரோக செயலுக்கு இடையூறாக இருப்பதால், நான்கு ராணுவ அதிகாரிகள் சேர்ந்து சரவணனை தீர்த்து கட்டுகின்றனர்.
அதோடு, சரவணனை தேசத்துரோகி போன்று சித்தரித்து, இறந்த பின்னர் அவருக்கு கிடைக்க வேண்டிய ராணுவ மரியாதை கூட கிடைக்காமல் செய்கின்றனர். இதனால், சரவணனின் மனைவி மற்றும் மகனையும் ஊரார் ஒதுக்கி வைக்கின்றனர்.
சுமார் 20 வருடங்களுக்கு பின்னர், சர்வதேச குற்றவாளிகளாக மாறிவிட்ட இந்த 4 எதிரிகளையும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பழிவாங்கி, தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைத்து எறிகிறார் மகன் விஜய்.
ஒருவரை போலீசிடமிருந்து காப்பாற்றுகிறார். மற்றொரு வில்லனின் மகளையே காதலிக்கிறார். மூன்றாவது வில்லனிடம் அவரது மகன் என்று நாடகமாடுகிறார்.
இப்படி வில்லனையும் ஒவ்வொரு விதத்தில் தீர்த்துக்கட்டும் விஷயம் மற்றொரு வில்லனான பிரகாஷ்ராஜூக்கு தெரியவர, முடிவு என்ன என்பது விறுவிறுப்பான க்ளைமாக்ஸ். மேஜர் சரவணன், அவரது மகன் புகழ் என இரண்டு வேடங்களிலும் ஒரே மாதிரியான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். இளமையான அப்பா வேடத்துக்காக மீசையை மட்டும் முறுக்கிவிட்டு சமாளித்துக் கொள்கிறார். மகன் விஜய், வழக்கமான படங்களிலும் வரும் துறுதுறு விஜயாகவே இருக்கிறார்.
காவல்துறையின் கண்காணிப்பை மீறி வில்லனை காப்பாற்றும் ஆரம்ப காட்சியிலேயே விஜய் யார் என்ற ஆவலை தூண்டிவிடுகிறார் பிரபுதேவா. ஆனால், முந்தைய படங்களில் இருந்து எந்த வகையிலும் விஜயின் நடிப்பில் வித்தியாசம் இல்லாதது பெரும் குறை.
வழக்கம் போல், விஜய்- நயன்தாரா சந்திப்பு குறும்பான மோதலில் தொடங்கி காதலில் முடிகிறது. படத்தில் எப்போதும் கவர்ச்சியாகவே திரிகிறார் நயன்தாரா.
வடிவேலுவின் காமெடி கூட இந்த படத்தில் செல்லுபடியாகவில்லை என்பது மற்றொரு குறை. விஜயின் நடிப்பில் மட்டுமல்ல வடிவேலுவின் காமெடியிலும் மாற்றம் தேவை என்பதையே இப்படம் உணர்த்துகிறது.
வழக்கத்தை விடவும் குறைவான உற்சாகத்தில் பிரகாஷ்ராஜ். பார்த்து பார்த்து அலுத்துப்போன மானரிஷங்கள்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பலம். 'மம்மி டாடி...', 'ராமாகிட்ட வில்லை கேட்டேன்...' 'நீ கோபப்பட்டுப் பார்த்தால்..' போன்றவை மனதில் ரீங்காரமிடுகின்றன. அதிரடி ஆக்சன் காட்சிகளில் ஜாலம் செய்கிறது கேமரா.
விஜயின் மனைவியாகவும், தாயாகவும் வரும் ரஞ்சிதா பரிதாபத்தை அள்ளுகிறார். கீதா, மனோஜ் கே.ஜெயன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
'போக்கிரி' அளவுக்கு கூர் தீட்டாததால் மனதில் தைக்கவில்லை 'வில்லு'
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 17 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|