|
| பஞ்சாமிர்தம் | |
புராணக் கதையை, நிகழ்கால கதையுடன் இணைத்து நகைச்சுவை சாறு பிழிந்திருக்கிறார் இயக்குனர் ராஜு ஈஸ்வரன்.
ராமாயண காலத்து மாரிசனுக்கும், இடும்பனுக்கும் தங்களது குருவின் மகள் மந்தாகினியின் மீது மோகம். மந்தாகினியை கவர்வது யார் என்ற மோதலில் இடும்பனை கால் தண்டையாக மாற்றி காலில் அணிந்து கொள்கிறான் மாரிசன்.
பிறகு மாயமானாக ராமனுக்கு போக்குகாட்டி அவனது அம்பால் வீழ்த்தப்பட்டு பூமியில் பாறையாக மாரிசன் மாறுவதுடன் புராணக்கதை நிறைவடைகிறது.
நிகழ்கால கதை ஊட்டியில் நடக்கிறது. பணக்காரரான நாசரின் உதவியாளர் சரண்யா மோகன். அவரது கெடுபிடி பிடிக்காமல் நாசரை சுற்றியுள்ளவர்கள் மலையிலிருந்து சரண்யா மோகனை கிழே தள்ளிவிடுகிறார்கள். சரண்யா மோகன் விழும் இடம் மாரிசன் பாறை. சரண்யாவால் சாபவிமோசனம் பெறும் மாரிசன், அவருக்கு உதவ முன்வருகிறார்.
இப்போது கதையில் எதிர்பாராத திருப்பம். சரண்யா மீண்டும் நாசரை தேடி வரும்போது அங்கு இருப்பது நாசரைப் போல தோற்றம் கொண்ட வேறொரு நாசர். அவருக்கு உதவி செய்வது புராண காலத்தில் மாரிசனால் தோற்கடிக்கப்பட்ட இடும்பன்.
இந்த காமெடி கலாட்டாவுக்கு நடுவே நாசரின் பேத்திதான் சரண்யா மோகன் என்ற கிளைக்கதையும், சரண்யா மோகன்- அரவிந்தனின் காதல் கதையும் உண்டு.
புராணத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்ததில் இயக்குனர் வெற்றிபெற்றிருக்கிறார்.
சரண்யா மோகனின் வழக்கமான துறுதுறு நடிப்பும், நாசரின் லொள்ளும் படத்தின் ரசிக்க வைக்கின்றன.
மாரிசனாக ஜெயராமின் நடிப்பும், இடும்பனாக வரும் இயக்குனர் ராஜு ஈஸ்வரனுடன் அவர் மோதும் காட்சிகளும் குழந்தைகளை கவரும்.
வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் கருணாஸ். எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, இளவரசு கூட்டணி சேரும் போதெல்லாம் சிரிப்பலை வெடிக்கிறது. சுந்தர்.சி பாபுவின் பாடல்கள் சுமார் ரகம்.
குழந்தைகளை மனதில் வைத்து கிராபிக்ஸை பயன்படுத்தியிருப்பதால் தரம் குறித்து இயக்குனர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
பஞ்சாமிர்தம் - காமெடி கலவை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|