யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
- பெரு
WD
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.

கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் அவர், தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.

சரண்யாவின் சம்மந்தி (மாமியார்) வீட்டில், மகன் திருமண அன்று, மகளின் (சரண்யாவின் நாத்தனார்) திருமணத்தையும் சேர்த்து நடத்த முடிவு செய்கின்றனர். இரண்டு திருமணத்துக்கும் ஏற்பாடு நடக்கிறது.

திருமண நாளில், சரண்யாவின் நாத்தனாருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதனால், ஷக்தியை திடீர் மாப்பிள்ளையாகும்படி அனைவரும் கெஞ்ச, மறுத்துவிடுகிறார் ஷக்தி. இதனால், சரண்யாவின் திருமணமும் தடைபடுகிறது.

பட்டணத்தில் சந்தியாவுடனான தனது காதலை எடுத்துச் சொல்லியும், தங்கைக்காக திடீர் மாப்பிள்ளை ஆக மறுத்த ஷக்தியை அனைவரும் வெறுக்கின்றனர்.

இறுதியில், உண்மையான காரணம் என்ன என்பதை ஷக்தி கூறுகிறார். இதனால், பழைய பாசத்துடன் குடும்பம் நெருங்கி வரும்போது ஷக்தி விலகிப் போகிறார். ஏன் என்பது எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க சி‌ரித்த முகமாய் வரும் ஷக்திக்கு பெரிதாக வேலை இல்லை. சந்தியாவுடனான காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை. பாசக்கார அண்ணனாகவும் பெரிய அளவில் சோபிக்க வாய்ப்பில்லை. குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி தவிக்கும்போது மட்டும் நடிக்க முயற்சிக்கிறார் ஷக்தி.

சந்தியாவும் வழக்கம் போல் துறு துறு பெண்ணாக நடிக்க முயன்றிருக்கிறார். காதல் வசனங்களில் நாடகத்தன்மையை காட்டுகிறார்.

சரண்யா மோகன், வெட்கம் கலந்த துடுக்குத்தனமான பெண்ணாக வருகிறார். ஆனாலும் மனதில் ஒட்டவில்லை. வித்யாசாக‌ரின் இசை, ஒளிப்பதிவு என எல்லாமே சுமார் ரகம்.

அழகான குடும்பக் கதையாக தொடங்கி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இறுதியில் ரத்தம், கொலை என திசைமாறுகிறது கதை. இதே மாதிரி பல படங்களை பார்த்துவிட்டதால், ஏதோ பழைய படம் பார்த்த உணர்வே மிஞ்சுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
எல்லாம் அவன் செயல்
பூ - விமர்சனம்
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...