|
| சிலம்பாட்டம் | |
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.
அட, இப்படி எல்லாம் கூட சிம்பு நடிப்பாரா என்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்தக் காட்சியிலேயே அக்ரஹாரத்து பெண்களுடன் சரசமாடுகிறார். அதானே, சிம்புவாவது வம்பை விடுறதாவது...!
தாத்தா நெடுமுடி வேணுவின் பராமரிப்பில் வளர்க்கப்படும் அக்ரஹாரத்து அப்பாவி இளைஞராக வளைய வருகிறார் சிம்பு.
இதற்கிடையே, சிறையில் இருந்தபடியே, எம்.பி. ஆகப் போகும் கிஷோரை கொல்ல ஆட்களை ஏவுகிறார் பிரபு. அவர்களில் ஒருவனை கிஷோரின் ஆட்களிடமிருந்து காப்பாற்றுகிறார் சிம்பு.
சிறையிலிருந்து விடுதலையாகி வரும் பிரபு, சிம்புவை பார்த்து அதிர்ச்சியாகிறார். பின்னர், 'நீ என் தம்பியின் மகன்' என்க, விரிகிறது பிளாஷ்பேக்.
பிரபுவும், சிம்புவும் அண்ணன் தம்பிகள். அதே ஊரில் மக்களை ஏமாற்றும் தனது பங்காளி பொன்வண்ணன் கும்பலை தட்டி கேட்கிறார் சிம்பு. இந்த மோதலில் தன்னை தானே குத்திக்கொண்டு சாகும் பொன்வண்ணன், பழியை சிம்பு மீது போடுகிறார்.
இதனால், கொதித்தெழும் பொன்வண்ணனின் பத்து வயது மகன் கிஷோர், சிம்புவின் குடும்பத்தினரை கொலை செய்கிறான். அப்போது நடக்கும் மோதலில் சிம்பும் கொல்லப்படுகிறார். பிரபு சிறை செல்கிறார்.
சிம்புவின் மனைவி சினேகாவை தன்னுடன் அழைத்து செல்லும் அவரது அப்பா நெடுமுடிவேணு, சினேகாவுக்கு பிறக்கும் மகனை (மகன் சிம்பு) அக்ரஹாரத்து அப்பாவி அம்பியாக வளர்க்கிறார். தனது பிளாஷ்பேக் தெரிந்ததும், அப்பா சிம்புவை கொன்றவர்களை மகன் சிம்பு பழி தீர்க்கிறார்.
முறுக்கிய மீசையுடன் அப்பா தமிழரசனாகவும், அக்ரஹாரத்து அம்பியாகவும் இரட்டை வேடங்களில் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார் சிம்பு. வழக்கம் போல், நடனக்காட்சிகளில் ஓவர் ஆட்டம் போடுகிறார்.
சில காட்சிகளில் மட்டும் வந்து காமிராவை பார்த்து கோபமாக உறுமுகிறார் பிரபு. இளமை பூரிக்கும் சனாகான் சல்ஷாகான். கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் பஞ்சமில்லாமல் சேவை செய்கிறார். சினேகா, நிரோஷா, யுவராணி ஆகியோரும் தலைகாட்டிவிட்டு போகிறார்கள்.
வில்லன் கிஷோர் போடும் காட்டுக்கூச்சல் சலிப்பு. இரட்டை அர்த்த ஜோக் சொல்லி கடுப்பேற்றுகிறார் சந்தானம். மனதுக்கு ஒரே ஆறுதல் இளமை பொங்கும் யுவனின் இசை. பார்ட்டி பாடல் இளசுகளுக்கு வரப்பிரசாதம். மதியின் கேமரா படத்துக்கு பலம்.
இரட்டை அர்த்த வசனங்கள், பாத்ரூம் ஜோக்குகள் ஆகியவற்றை தவிர்த்து, ஆபாசத்தையும் குறைத்திருந்திருந்தால் சிம்புவுக்கும், இயக்குனருக்கும் ஓர் நல்ல படமாக அமைந்திருக்கும்.
'சிலம்பாட்டம்'- சிம்புவின் ஓவர் ஆட்டம்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்.... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்... |
| |
|
|
|
|
|
|
|