யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
பூ - விமர்சனம்
பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்.
Poo Movie
WD


கவர்ச்சி உடையில் நாயகனுடன் குத்தாட்டம் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறாமல், பூத்திருக்கும் சமீபத்திய படம் 'பூ' வாகத் தான் இருக்கும்.

மா‌ரிக்கு சின்ன வயது முதல் மாமன் தங்கராசு மீது ப்‌ரியம். வளர்ந்து மாமனை கட்டிக்கப் போறேன் என்று வாத்தியார்முன் சொல்லும் அளவுக்கு காதல்.

இன்‌ஜினிய‌ரிங் படிக்கச் செல்லும் மாமன், சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது. திருமணம் ஆன பிறகு மா‌ரியின் மாமன் மீதான காதல் என்னானது? நெஞ்சை பிழிய வைத்து ப்‌ரியாவிடை தருகிறார், சசி.

அரும்பாகி மொட்டாகி பூவாகும் மா‌ரியின் காதலை சரம் சரமாகத் தொடுத்திருக்கிறார் இயக்குனர். தங்கராசுவின் உயரத்தை கணக்கிட ஃபோர்மேனின் அருகில் நின்று மா‌ரி அளவெடுக்கும் காட்சியில் காதலின் கனம்.

கதாபாத்திரங்களுடன் வளர்ந்துவரும் அந்த ரெட்டை பனை மரம், காவியச் சுவை. நுரைத்துப் பொங்கும் காதலுடன் மா‌ரியாக வரும் பார்வதி, மனதில் ப்ரேம் போட்டு தங்கி விடுகிறார். கள்ளிப் பழம் கொடுக்க முடியாத விரக்தியில் அழுகிறாரே.. கனிந்த நடிப்பு.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ஓரமாக நிற்க வேண்டிவரும் என்பது தெ‌ரிந்தே நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். மனைவி தன்னை திட்டுவது மா‌ரிக்கு தெ‌ரிந்துவிடக் கூடாது என்று தவிக்கும் காட்சியில் கவனிக்க வைக்கிறார்.

கேமரா எதிர்பார்க்கும் குறைந்தபட்ச அழகியலையும் நிராக‌ரிக்கும் விதமாக பல நடிகர்களை அறிமுகப்படுத்திய சசியை எத்தனை பாராட்டினாலும் தகும். மா‌ரியின் அம்மா, அண்ணன், தோழி, பேனாக்காரர், டீக்கடை அலோ, சின்ன வயது மா‌ரி... சின்னச்சின்ன கேரக்டர்களையும் சின்சியராக செதுக்கியிருக்கிறார்கள்.

கதையை சிதைக்காத அதே நேரம் கதையை உயர்ந்தபட்ச சாத்தியங்களுக்கு கொண்டு செல்கிறது கேமரா. செம்மண் பிராந்தியத்தை காட்டும் லாங் ஷாட்கள் அற்புதமானவை. ரெட்டை பனை மரங்களை மா‌ரி சுற்றிவரும் முதல் காட்சியில் பிரவாகித்துவரும் இசை மனதை நிறைக்கிறது.

அவன் (தங்கராசு) உனக்கு இல்லைனு ஆனபிறகும் அதே பாசத்தோடு உன்னால எப்படி இருக்க முடியுது? மா‌ரியின் தோழி கேட்கும் இந்த கேள்விக்கான விடையை காட்சிகளாக்கியிருப்பதுதான் பூ-வின் ஆதாரம்.

பூ-வில் சில நெருடல்கள். ஊருக்கே தெ‌ரியும் மா‌ரியின் காதல் தங்கராசுவுக்கு மட்டும் தெ‌ரியாமல் போனது எப்படி? வாத்தியார் முன் துடுக்காக மாமனை கட்டிக்கப் போவதாக கூறும் மா‌ரி, தங்கராசுவிடம் காதலை சொல்ல தடுமாறுவது பருவம் தந்த வெட்கமா? இல்லை தயக்கமா?

தங்கராசுவை பார்க்க முடியாத வலி, ஏமாற்றம் ஆகியவற்றின் மூலமே மா‌ரியின் காதலை சொல்லியிருப்பது படத்தை வழக்கமான பார்முலாவுக்குள் சிக்க வைக்கிறது.

தமிழில் வெளியாகும் அள்ளித் தெ‌‌ளித்த கோலங்களுக்கு நடுவே அழுத்தமாக கதை சொல்ல முயன்றிருக்கும் பூ... குறிஞ்சி‌ப் 'பூ'.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
சேவல்
ஏகன்
சக்கரகட்டி
கத்திக்கப்பல்
செய்திகள்
தேசியம் - பெ‌ட்ரோ‌ல் விலை ரூ.5-ம், டீச‌ல் விலை ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பூ - விமர்சனம்
பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுகள்.
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - நம்மில் பெரும்பாலானோருக்கு தேநீர் அருந்தாமல் இருக்க முடியாது. அந்த நேரங்களில் பச்சைத் தேநீரைக் குடித்தால் இதய நோய் உங்களை அண்டாது...
மேலும் படிக்க|மேலும்...