யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
சேவல்
- பெரு
WD
இயக்குனர் ஹரி தனது வழக்கமான ஆக்சன் அரிவாள் கலாச்சாரத்துடன், இந்த முறை கொஞ்சம் சோக சென்டிமெண்டும் கலந்து தந்திருக்கும் படம் 'சேவல்'.

பூக்கார இளைஞர் பரத்துக்கு அக்ரஹாரத்து பெண் பூனம் ப‌ஜ்வா மீது காதல். முதலில் காதலை ஏற்க மறுக்கும் பூனம், மனம் மாறி காதலை ஏற்கும்போது வருகிறது சிக்கல். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அக்காள் சிம்ரனுக்காக, அவரது கணவருக்கே இரண்டாம் தாரமாக வாக்கப்படும் நிலை.

இதுதவிர, கிருஷ்ணா, சம்பத் என பலரும் பூனத்தை வேட்டையாட காத்திருக்க, பரத் சண்டை சேவலாய் சிலிர்ந்து எழுந்து அவரை காப்பாற்றுவதே கதை.

ஏற்றி கட்டிய லுங்கியுடன், திருநெல்வேலி பாஷையுமாய் தெனாவெட்டு இளைஞனாய் வருகிறார் ப்ரத். வீட்டுக்கு அடங்காமல் அடாவடி செய்வதும், தவறை உணர்ந்த பிறகு பூனத்துக்காக உருகுவதும் என நடிப்பில் மெருகேறி இருக்கிறார்.

பூனம் தமிழுக்கு கிடைத்துள்ள அழகான வரவு. ஹரி பட இலக்கணப்படி பள்ளிச் சீருடையிலேயே கவர்ச்சி ஆட்டம் போடும் போதும், கிராமத்துப் பெண்ணாக குளத்தில் குதியாட்டம் போடும்போடும் ரசிக்க வைக்கிறார்.

காதலனா, அக்காவின் குடும்பமா என்று முடிவு எடுக்கமுடியாமல் திணறும்போதும், க்ளைமாக்ஸில் மொட்டையடிக்கப்படும் போதும் சோகத்தில் உச் கொட்ட வைக்கிறார்.

நீண்டநாளைக்கு பிறகு சிம்ரன். தனது பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். முதலில் கலகல காட்சிகளால் ரசிக்க வைக்கும் அவர், பின்னர் புற்றுநோய்க்கு பலியாகும் போது உருகவைக்கிறார்.

ராஜேஷ், சம்பத் என பலரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வழக்கம்போல், காதல் தூது போகும் வடிவேலு, பலரிடமும் அடிவாங்கி சிரிக்க வைக்கிறார். ஆவேசமாக அ‌ரிவாளுடன் கிளம்பும் பரத்தை தடுத்து அறிவுரை சொல்லும் போது நெகிழ வைக்கிறார்.

ப்‌ரியன் ஒளிப்பதிவு, நெல்லைச் சீமையின் அழகை காமிராவில் அள்ளி கொண்டு வந்திருக்கிறது. ‌ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார்.

அளவுக்கு அதிகமான சோகமும், புளித்துப்போன பழைய பஞ்சாங்க கதையும் சண்டை 'சேவலை' சீக்குக்'கோழி'யாக மாற்றிவிட்டன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஏகன்
சக்கரகட்டி
கத்திக்கப்பல்
காதலில் விழுந்தேன் - ‌விம‌ர்சன‌ம்!
துரை
பந்தயம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...