யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
ஏகன்
- பெரு
Eagan
WD
னது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.

இதற்காக, அஜித், நயன்தாரா, ஜெயராம், நாசர் போன்ற திறமையான முன்னணி நட்சத்திரங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வேதனை.

மிகப்பெரிய கிரிமினல்கள் சுமன்-தேவன். மருந்துப் பொருட்களில் கலப்படம் செய்யும் சுமனின் திட்டம் பிடிக்காமல் அவரிடமிருந்து விலகும் தேவன் போலீசில் சிக்கி அப்ரூவராக மாறுகிறார்.

அவரை தீர்த்தக்கட்ட சுமன் ஆள் அனுப்ப, பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருந்தும் தேவனை கொல்ல முயற்சி நடக்கிறது. அதிலிருந்து தப்பும் தேவன், ஊட்டியில் கல்லூரியில் படிக்கும் தனது மகள் பியாவை அழைத்துக் கொண்டு அமெரிக்கா தப்பி செல்ல திட்டமிடுகிறார்.

பியாவை பார்ப்பதற்கு தேவன் வருவார் என்பதையறிந்து, அவரை பிடிக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டான தனது (வளர்ப்பு) மகன் அஜித்தை கல்லூரி மாணவர் வேடத்தில் ஊட்டிக்கு அனுப்புகிறார் காவல்துறை அதிகாரி நாசர். இதற்கிடையே, பியாவையும், தேவனையும் தேடி வில்லன் கும்பலும் ஊட்டி வருகிறது.

கல்லூரியில் சேர்ந்து பியாவை கண்காணிக்கும் அஜித்துக்கு, பியாவை காதலிக்கு நவ்தீப் தனது தம்பி என்பது தெரியவருகிறது. இறுதியில், வில்லன் கும்பலை அழித்து, தேவனையும் கைது செய்கிறார் அஜித்.

அதோடு, தன்னால் பிரிந்த நாசர்- சுகாசினி தம்பதியை சேர்த்துவைப்பதோடு, கல்லூரி பேராசிரியையான காதலி நயன்தாராவையும் கைப்பிடிக்க, முடிவு சுபம்!.

கதை என்னவோ கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சொதப்பல் திரைக்கதை, அழுத்தம் இல்லாத காட்சி மைப்புகளால் படத்தின் மீதான சுவாரசியம் குறைகிறது.

அஜித் வழக்கம் போல், ஆடல், பாடல், அதிரடி சண்டை என அசத்துகிறார். நீளமான மீசை, தாடி சகிதம் ஓர் போலீஸ் அதிகாரியாக அறிமுக காட்சியில் அவர் மிரட்டினாலும், அந்த 'கெட்அப்' அவருக்கு ஒட்ட மறுக்கிறது.

பிறகு, கல்லூரி மாணவராக மாறும் அவர், லூசுத்தனமான (அப்படித்தான் அறிமுகப்படுத்துகிறார்கள்) கல்லூரி முதல்வர் ஜெயராமுடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்.

வழக்கம் போல் கவர்ச்சி ஊறுகாயாக நயன்தாரா. மாணவிகளே கொஞ்சம் நாகரிகமான டிரெஸ்ஸில் வர, கல்லூரி பேராசிரியையான இவர் மட்டும் எப்போதும் இடுப்பும், முழு முதுகும் தெரியும் கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.

அஜித், நயன்தாரா காதலைப் போலவே, நவ்தீப்-பியா காதலிலும் அழுத்தம் இல்லை.

சுமன்-ஸ்ரீமன் ஆகியோரையும் காமெடி வில்லன்களாக காட்டியிருப்பதால் படத்தில் சீரியஸ்னெஸ் மிஸ்ஸிங்.

விஜய் மல்லையாவை நினைவுப்படுத்தும் சுமனின் கெட்டப் பெரிதாக எதிர்பார்க்க வைத்து, இறுதியில் 'சப்'பென்றாகி விடுகிறது.

போலீஸ் அதிகாரியாக கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார் நாசர். ஜெயராம், சுகாசினி ஆகியோர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யுவனின் இசையில் பாடல்கள் சுமார். 'ஏ சாலா' பாடல் ஓகே. நடனத்தில் காட்டிய அக்கறையை இசையிலும் காட்டியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் அர்ஜுனன் கேமரா கண்களுக்கு விருந்து.

அதிரடி சண்டை காட்சிகளை தவிர, அஜித்-நயன், நவ்தீப்-பியா காதல் காட்சிகளாகட்டும், பியா-தேவன், நவ்தீப்- சுகாசினி சென்டிமெண்ட் காட்சிகளாகட்டும் எதுவும் மனதில் ஒட்டவில்லை என்பது மிகப்பெரிய குறை.

க்ளைமாக்ஸை எப்படி முடிவு செய்வது என்பதில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பியிருக்கிறார் ராஜூசுந்தரம். நடன இயக்குனராக மட்டும் ஜெயித்திருக்கிறார்.

ஏகன் - ஏமாற்றம்?

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சக்கரகட்டி
கத்திக்கப்பல்
காதலில் விழுந்தேன் - ‌விம‌ர்சன‌ம்!
பந்தயம்
ராமன் தேடிய சீதை
பொய் சொல்ல போறோம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...