யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
கத்திக்கப்பல்
- பெரு
WD
சந்தன கடத்தல் வீரப்பனின் ஆள்கடத்தல் சம்பவத்துடன் கொஞ்சம் கற்பனை கலந்து ஓர் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லரை தந்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.

பண ஆசை பிடித்த நான்கு போலீஸ் அதிகாரிகள் வீரய்யன் என்ற காட்டு கொள்ளையனை உருவாக்கி, அவன் மூலம் ஓர் அமைச்சரை கடத்தி, 3 கோடி ரூபாய் பணம் கேட்கின்றனர். பணம் கைமாறியதும் அமைச்சரை தீர்த்துக்கட்டுகின்றனர். வீரய்யனையும் தீர்த்துக்கட்டிவிட்டு பணத்தை சுருட்ட முயற்சிக்கின்றனர்.

ணத்தை காட்டுக்குள் புதைத்துவைத்துவிட்டு, அவர்களிடமிருந்து குண்டு காயங்களுடன் தப்புகிறான் வீரய்யன். பின்னர் டாக்டர் பாரி வள்ளலிடம் நடந்த சம்பவத்தையும், பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கூறிவிட்டு இறந்துவிடுகிறான்.

இந்த விஷயம் தெரிந்ததும் போலீஸ் அதிகாரிகள், டாக்டர் பாரி வள்ளலையும் தீர்த்துக்கட்டுகின்றனர். இதனால் கொதித்தெழும் பாரிவள்ளலின் காதல் மனைவி, நீண்டகாலம் காத்திருந்து, அந்த போலீஸ் அதிகாரிகளை எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் கதை.

இந்த சம்பவம் நடந்த 20 வருடங்களுக்குப் பிறகு, ஆரம்பமாகிறது படம். இறந்துபோன டாக்டர் பாரிவள்ளல் நான் தான் என்று கூறிக்கொண்டு கிராமத்துக்குள் நுழையும் அறிமுக நாயகன் அனூப்குமார், ஓர் தேர்ந்த நடிகர் போல் ஆச்சரியப்படுத்துகிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரம், டாக்டர் பாரிவள்ளலின் காதல் மனைவி ஜீவஜோதியாக வரும் மீரா வாசுதேவன். காதல், சோகம், பிரிவு, விரக்தி, கோபம் என அனைத்திலும் உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளிக்கிறார்.

அனூப்குமாரின் மனைவியாக வரும் பூர்ணிதாவின் முகத்தில் ரொம்பவே குழந்தை தனம் பளிச்சிடுகிறது. இவர்களை கண்காணிக்கும் போலீஸ் அதிகாரி சந்திரபோஸ் தான் வில்லன் என்பது தெரிய வரும்போது திடுக் திருப்பம்.

ஒரு கொலையின் பின்னணியாக வைத்து வித்தியாசமான பாணியில் கதை சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம். இசையும், ஒளிப்பதிவும் படத்துக்கு பக்கபலம். படத்தின் வேகத்தை குறைக்கும் வகையிலான நீளமான பாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கத்திக் கப்பல் - கரைசேரும்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காதலில் விழுந்தேன் - ‌விம‌ர்சன‌ம்!
காதலில் விழுந்தேன்
பந்தயம்
ராமன் தேடிய சீதை
பொய் சொல்ல போறோம்
அலிபாபா
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...