|
| காதலில் விழுந்தேன் - விமர்சனம்! | |
'குணா', 'காதல் கொண்டேன்' படங்களின் கலவை தான் 'காதலில் விழுந்தேன்'.
தனது துப்பட்டாவால் விபத்தில் சிக்கும் நாயகன் நகுலை மருத்துவமனையில் சேர்த்து, அன்பாக கவனித்துக் கொள்கிறார் கோடீஸ்வர நாயகி சுனேனா. இதனால் இருவரும் பரஸ்பரம் காதலில் விழுகின்றனர்.
திடீரென்று ஒருநாள் சுனேனா இறந்து விடுகிறார். சுனைனா மீது கொண்ட அதீத காதல் காரணமாக, அவரது மரணத்தை நம்ப மறுக்கும் நகுல், அவரது பிணத்தை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்.
இதனால், போலீஸ் துரத்த, ஓடிக்கொண்டே இருக்கிறார் நகுல். இறுதியில், சுனைனா எப்படி இறந்தார், நகுல் என்ன ஆனார் என்பது திடுக் திருப்பங்கள் நிறைந்த க்ளைமாக்ஸ்.
'பாய்ஸ்' நகுலா இது ஆச்சரியப்படும் அளவிற்கு உடல் அமைப்பில் மட்டுமல்லாமல், நடிப்பு, நடனம், சண்டை என அனைத்திலும் ரொம்பவே தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்.
சுனேனா மீது அவர் காட்டும் அதீத காதல், அவரது இறப்பை நம்ப மறுத்து மனநிலை பிறழ்வது, தன்னை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியுடன் ஓடும் ரயிலில் மோதுவது என தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார் நகுல். இன்றைய இளம் நடிகர்கள் வரிசையில் நகுல் ஓர் நல்வரவு.
இயல்பான கல்லூரிப் பெண் வேடத்தில் சுனேனா. நகுலுடனான காதல் காட்சிகளில் மனதை கொள்ளை கொள்கிறார். தனது மரணத்தின் மூலம் ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளுகிறார்.
துடிப்பான போலீஸ் அதிகாரியாக சம்பத். நகுலை துரத்திச் செல்வதும், உயிரை பணயம் வைத்து நகுலுடன் மோதுவதும் விறுவிறுப்பு.
விஜய் ஆண்டனியின் இசையில் 'நாக்க முக்க' பாடல் காட்சியில் தியேட்டரே எழுந்துநின்று ஆடுகிறது. 'தோழியா காதலியா', 'உன் தலைமுடி கூட' பாடல்கள் மனதை வருடும் மெலடிகள்.
தனது காமிரா கண்கள் மூலம் ஊட்டியின் அழகை அப்படியே அள்ளிகொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.
நம்ப முடியாத கதை, இடைவேளைக்கு பிறகு வரும் வன்முறை காட்சிகள் போன்றவை படத்தின் மீதான ரசனையை குறைக்கின்றன.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், இதைவிடவும் சுவாரசியமான ஒரு காதல் கதையை இயக்குனர் பிரசாத் தந்திருக்கலாம்.
காதலில் விழுந்தேன்- காதலர்களுக்கு மட்டும்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|