|
| பந்தயம் |
சாதாரண ரவுடியாக இருந்து மந்திரியாக உயர்ந்தவர் பிரகாஷ் ராஜ். அவரால், தனது நண்பன் கொலை செய்யப்பட, பழி வாங்க புறப்படுகிறார் நிதின் சத்யா. இதற்காக, பிரகாஷ்ராஜிடமே அடியாளாக சேர, அவரது தங்கை சிந்து துலானி மீது காதல் பிறக்கிறது நிதின் சத்யாவுக்கு.
தனது தங்கையை யாரோ லவ்வுவது தெரிந்து, அந்த காதலனை தீர்த்துக்கட்டும் பொறுப்பை நிதின் சத்யாவிடமே ஒப்படைக்கிறார் பிரகாஷ்ராஜ். இறுதியில், அந்த காதலனே நிதின் சத்யாதான் என தெரியவர, இருவருக்கும் இடையே வெடிக்கும் நீயா, நானா போட்டிதான் 'பந்தயம்'.
பிரகாஷ் ராஜின் நடிப்பு பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. வழக்கம்போலவே கத்துகிறார், மிரட்டுகிறார், எதிரிகளை சீவி தள்ளுகிறார். இதுவே ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
பிரகாஷ் ராஜிக்கு எதிராக ஹீரோயிஸம் செய்ய அருமையான வாய்ப்பு நிதின் சத்யாவுக்கு. என்றாலும் பல இடங்களில் சோபிக்க முடியாமல் தடுமாறுகிறார். கிளாமருக்கு மட்டுமே பயன்படும் நாயகியாக சிந்து துலானி. இதனால் அதிக வேலை இல்லை.
தனது தந்தை, சகோதரனை கொன்ற பிரகாஷ் ராஜூடன் அமைதியாய் குடும்பம் நடத்தும் ராதிகா, க்ளைமாக்ஸில் சிந்து துலானி காதலுக்காக பொங்குவது எல்லாம் நம்பும்படி இல்லை. ரொம்பவே பரிதாபத்துக்குரியதாக அமைந்துவிட்டது அவரது பாத்திரம்.
கதைக்கு சம்பந்தமே இல்லாத கெஸ்ட் ரோலில் விஜய். இரண்டே காட்சிகளில் வந்தாலும் எக்கச்சக்கமாய் பஞ்ச் டயலாக் பேசுகிறார். இதெல்லாம் யாருக்காக என்பதான் புரியாத புதிர்.
ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு பலம். 'சுராங்கனி...', 'சின்ன மாமியே...' பாடல்கள் கேட்கலாம். பார்ப்பதுதான் கஷ்டம்.
திரைக்கதையிலும் சரி. இயக்கத்திலும் சரி. 'சட்டம் ஒரு இருட்டறை' காலத்திலிருந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்னும் மீளவில்லை என்பது நன்றாக புரிகிறது.
சினிமா 'பந்தய'த்தில் ஜெயிக்க இந்த வேகம் போதாது!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|