|
| ராமன் தேடிய சீதை | |
திருமணத்தன்று உடன்போக்கு (அதாங்க ஓடிப்போவது) செல்கிறார், மணப்பெண். திருமணம் நின்றதற்கு காரணம் நான்தான் என்று பழியை சுமக்கிறார், மணமகன். மகள் ஏற்படுத்திய அவமானத்திற்கு பரிகாரமாக, மணமகனுக்கு வேறு பெண் பார்க்கத் தொடங்கிறார், மணமகளின் தந்தை.
ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா சோகத்தை கசக்கிப் பிழிய என்று இருக்கையில் சற்று சாய்ந்தால், நிமிர வைத்து ஜில்லிட வைக்கும் திரைக்கதைதான் 'ராமன் தேடிய சீதை'.
உணர்ச்சி வசப்படும்போது வாய் திக்குவதும், சின்ன வயதில் எடுத்துக்கொண்ட மனநல சிகிச்சையும் சேரனின் திருமணத்துக்கு தடையாக இருக்கின்றன. அவருக்கு பெண்தேடும் உடன்போக்கு சென்ற மணமகளின் தந்தை மணிவண்ணன்.
கார்த்திகாவை பெண்பார்க்க சேரனை நாகர்கோவிலுக்கு அழைத்து செல்கிறார், மணிவண்ணன். அங்கு தன்னை மணமேடையில் உதறிவிட்டுப்போன ரம்யா நம்பீஸனையும், தன்னை முதல் முதலில் பிடிக்கவில்லை என்று கூறிய விமலா ராமனையும் சந்திக்கிறார். அவரது நண்பர் பசுபதி சொல்லும் நவ்யாநாயரும் அங்குதான் இருக்கிறார். சேரன் யாரை திருமணம் செய்தார் என்பதுடன் சுபம்.
சந்தோஷமான தருணங்களிலும் சேரனிடம் சோகம் இழையோடுகிறது. சீதையை தேடும் ராமன் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தினாலும், பழைய சேரனின் பாவனைகளால் சுவாரஸ்யம் குறைகிறது.
நவ்யா நாயரை பெண் பார்க்கப் போய், அவரிடமே லத்தி சார்ஜ் வாங்கும் போதும், விமலா ராமன் வீட்டு பாத்ரூமிலிருந்து நொந்த இதயமும், நொறுங்கிய உடம்புமாக வெளிவரும் போதும் சிரிப்பூட்டுவதற்கு பதில் பரிதாபப்படவைக்கிறார்.
கண் பார்வையற்ற பசுபதி வரும் காட்சிகள், தன்னம்பிக்கை டானிக். கண் தெரியாதவர்களின் சைகை மொழியை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கும் அவரது நடிப்புக்கு நூற்றியொரு மதிப்பெண் இடலாம். கஜாலாவுடனான காதல் எபிசோடும் பளிச்.
நிதின் சத்யா நுழைந்தவுடன் காமெடி களேபரம் தொடங்குகிறது. நாலு பேரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று கார்த்திகா சொன்னதற்காக, நிதின் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதும், பிறகு கார்த்திகாவிடம் வாங்கி கட்டிக்கொள்வதும் ரசனை மிக்கவை.
கார்த்திகாவின் நடிப்பு காந்த சக்தி கொண்டவையாகவுள்ளது. விமலா ராமனின் மனம் மெதுவாக சேரனை நோக்கி வருவதும் கடைசியில் அது அழுகையாக வெடிப்பதும் திரைக்கதையின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டு.
தமிழுக்கு கிடைத்திருக்கும் நல்வரவு, ரம்யா நம்பீஸன். காக்கி உடையில் நவ்யா நாயர் காமெடி படா ஜோர்.
நாகர்கோவிலின் அழகை அப்படியே ஆராதிக்க வழிகை செய்த ராஜேஷ் யாதவின் கேமாராவுக்கு பாராட்டுகள் பல. குறிப்பாக, 'இப்பவே...' பாடலில் கேமராவையே ஜில்லிட வைத்துள்ளார். வித்யாசாகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாலாட்டு.
திரைக்கதையிலும் இயக்கத்திலும் தனது தனித்துவத்தைக் காட்டியுள்ளார், ஜெகன்நாத்.
ராமன் தேடிய சீதை... தேடலின் ஓர் இனிய பயணம்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | சரோஜா | | ஜாலிக்கும், 'ஜில்லிட'வைக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'சென்னை 600028' அணியால் விளையாடப்பட்ட இரண்டாவது... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை... |
| |
|
|
|
|
|
|
|