|
| பொய் சொல்ல போறோம் | |
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல போறோம்'
ஓய்வுபெற்ற கிளார்க் நெடுமுடி வேணு தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தனது கனவு இல்லத்தை கட்ட பிளாட் வாங்குகிறார். அதை ஆக்கிரமிக்கிறார், 'நில மோசடி தாதா' நார். காவல்துறை, அரசு என எங்கும் நீதி கிடைக்காமல், நிலம் போனால் போகிறது என்று விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறார் நெடுமுடி வேணு.
தந்தையின் கனவை நிறைவேற்ற தனது காதலியுடன் களம் இறகுகிறார் மூத்த மகன் கார்த்திக். பாஸ்கியின் தில்லு முல்லு திட்டங்களும், அதற்கு கார்த்திக் அண்டு கோ வடிவம் கொடுக்கும் விதமும், அதிலே தாதா நாசர் ஸ்வாஹா ஆகும் விதமும்... 'ஓ' போடவைக்கின்றன.
மகன்களை நண்பர்களாக நடத்துவதற்காக, அவர்களுக்கே மது ஊற்றிக் கொடுப்பது, நிலம் கைவிட்டு போன விரக்தியில் கண்ணீர்விட்டு குமுறுவது என நடிப்பில் தான் நெடும் பயணத்தைக் கடந்து வந்துவிட்டத்தை நிரூபித்திருக்கிறார் நெடுமுடி வேணு.
நாசரை ஏமாற்ற துபாய் ரிட்டர்னாக வேஷம் போடும் மெளலி, ரியலி ஜாலி. பயத்தில் அவர் காட்டும் விறைப்புக்கு வயிறு குலுங்குகிறது.
ஆமெரிக்கா செல்லும் ஆசையை அப்பாவின் நிலத்தை மீட்பதற்காக தள்ளிப்போடும் அன்பு மகனாக கார்த்திக். இதுவரை நடித்தப் படங்களிலேயே நடிப்பு என்றால் பொ.சொ.போ.தான் செஞ்சுரி.
இன்னொரு புறம் 'யார்ரா அது' என்று கேட்க வைக்கிறார் கார்த்திக்கின் தம்பியாக வரும் உமர். வாட்ச்மேனிடம் பாய்வதும், ரவுடியிடம் பதுங்குவதும் நிமிடத்துக்கு நிமிடம் முக பாவனைகளை மாற்றி, சதம்புகிறார் உமர்.
கார்த்திக்கின் நாயகி பியாவிடம் ஃப்ரெஷ்னஸைப் பார்க்க முடிகிறது. கோல்மால் திட்ட கமிஷன் தலைவர் பாஸ்கி, நெடுமுடி வேணுவின் மனைவியாக வரும் லஷ்மி இருவரும் ரசிகர்கள் மனதில் தங்கும் கதாபாத்திரங்கள்.
படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்ப்பவர், நாசர். ஜொள்ளிலும் லொள்ளிலும் ஏ கிளாஸ்.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜொலிக்கிறது, ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவின் கேமரா. இசை - பரவாயில்லை ரகம்.
வசனத்தாலே படத்தை நிறைத்திருப்பதால், திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு இல்லாமல் இல்லை. கொஞ்சம் லாஜிக் உதைக்கும் காட்சிகள் இருந்தாலும், அது நம் கண்ணுக்கு எளிதில் புலப்படுவதில்லை.
'கோஸ்லா கா கோஸ்லா' என்ற இந்தி படத்தின் சாரம், சற்றும் குறையாமல் தமிழுக்கு ஏற்றபடி ரீமேக்கியிருப்பதால், இயக்குனர் விஜய்யை வெகுவாக பாரட்டலாம்.
மொத்தத்தில், பொய் சொல்ல போறோம்... மெய்யாலுமே ஜாலிங்கோ!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | சரோஜா | | ஜாலிக்கும், 'ஜில்லிட'வைக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'சென்னை 600028' அணியால் விளையாடப்பட்ட இரண்டாவது... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை... |
| |
|
|
|
|
|
|
|