யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
அலிபாபா
- பாபு
Alibaba
PR
ஜாலி திருடன் வாழ்க்கையில் சீரியஸ் திருப்பங்கள் ஏற்படுவதும், அதை அவன் எதிர்கொள்ளும் விதமுமே க்ரைம் த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்த 'அலிபாபா'!

நகரில் இளம் பெண்கள் திடீர் திடீரென்று கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதலில் இறங்கும் போலீஸ் கமிஷனர் (பிஜு மேனன்) நெருக்கடிகளை சந்திக்கிறார்.

அங்கேதான் விஜயமாகிறார் ஜாலி திருடன் வேலு (கிருஷ்ணா). இடையே, அவனது தந்தையின் முயற்சியும் வீழ்ச்சியும். தன்னை வைத்து பகடையாடும் நிஜக் குற்றவாளியை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் வேலுவின் வேலைகளே திரைக்கதை.

அறிமுக நடிகர் கிருஷ்ணா, பத்து படங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் போல் அசத்துகிறார். பஞ்ச் வசனம் பக்கம் போகாமலிருப்பது, அவரது எதிர்காலத்துக்கு நல்லது. 'செல்ல' அப்பாவாக பிரகாஷ் ராஜ் வழக்கம்போல் மிடுக்கு.

'உழைப்பை திருடக் கொடுக்கிறதுக்கு பதிலாக, திருடுறதே உழைப்பா இருந்தா பெட்டர் இல்லையா' என்று பிரகாஷ் ராஜ் திருட்டுத் தொழிலுக்கு வியாக்கியானம் கொடுக்கும் இடம் ரகளை.

திருடனை காதலிக்கும் வரம்புமீறா தமிழ் சினிமா நாயகி ஜனனி. டூயட்டுக்கும், திருட்டு நாயகனுக்கும் உதவுவது மட்டுமே இவர் வேலை.

நேர்மையான போலீஸ் கமிஷனர் பிஜு மேனன், மிரட்டலுக்கு பணிந்து போகும் டி.ஜி.பி. அழகம்பெருமாள், அரசியல்வாதி ராதாரவி, லைவ் செக்ஸ் வெறியராக திலகன் என அனைவரும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

திரைக்கதை முழுவதிலுமே ஆங்காங்கே எதிர்பாராத திருப்பங்கள் தூவப்பட்டுள்ளது. ஆனால், கொஞ்சம் யோசிக்காமல் அதிக அளவில் கத்திரி போட்டிருக்கலாமே எனத் தோன்றுகிறது. பாடல்களில் இரண்டு ஓகே, க்ரைம் த்ரில்லர் வகையறா படத்துக்கு அவையும் ஸ்பீடு பிரேக்கர்கள்தான்.

இயல்பான வசன நடை, கச்சிதமான எடிட்டிங், பொருத்தமான ஒளிப்பதிவு ஆகியவை கதையை சிதைக்காமல் செல்வது ஆறுதலுக்குரிய அம்சங்கள்.

கதை என்னவோ வித்தியாசம்தான். ஆனால், திரைக்கதையில் தொய்வைத் தவிர்த்திருந்தால், 'அலிபாபா', ரசிகர்களின் இதயங்களை வெகுவாக திருடியிருப்பான.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தனம்
சரோஜா
தாம் தூம்
ஜெயம் கொண்டான்
நாயகன்
சத்யம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சரோஜா
ஜாலிக்கும், 'ஜில்லிட'வைக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'சென்னை 600028' அணியால் விளையாடப்பட்ட இரண்டாவது...
ஜெயம் கொண்டான்
தாம் தூம்
ஆரோக்கியம்
நலம் காக்க - பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை...
மேலும் படிக்க|மேலும்...