|
| தனம் | |
ஒரு நாளைக்கு 500 ரூபாய் ரேட் பேசும் பாலியல் தொழிலாளிக்கும், ஆச்சரமான அக்ரகாரத்து பையனுக்கும் ஏற்படும் காதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகிறது படம்.
தனது உழைப்பில்(?) ஊருக்கு நல்லது செய்யும் விலைமாது சங்கீதா. லோ-ஹிப் சேலைக்கட்டும், ஆண்களை அழைக்கும் உதட்டுச் சுழிப்பும் என கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார்.
இவரை பார்த்ததும் ஐயர் ஆத்து இளைஞர் பிரேமுக்கு காதல். வழக்கம் போல் எதிர்ப்பு கிளம்புகிறது. 'சங்கீதாவை மணந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்' என்று குடும்ப ஜோதிடர் கோட்டா சீனிவாசராவ் சொன்னதை கேட்டு சங்கீதாவை மருமகளாக ஏற்கின்றனர் பிரேம் குடும்பத்தினர்.
பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டு, குடும்பப் பெண்ணாக வாழ நினைக்கும் சங்கீதாவுக்கு ஜோதிடர் கோட்டா சீனிவாசராவ் ரூபத்தில் சிக்கல்.
தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், 'சங்கீதாவின் குழந்தையால் குடும்பத்தில் அழிவு' வரும் என்கிறார் சீனிவாசராவ். இதை நம்பி, கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை பிரேம் குடும்பத்தினர் கொலை செய்ய, ஐயர் ஆத்து மருமகளாவே இருந்து அவர்களை பழிவாங்கி விட்டு, தனது பழைய தொழிலுக்கே மீண்டும் திரும்புகிறார் சங்கீதா.
கதை என்னவோ கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், காட்சிப்படுத்தியதில் கவனம் சிதறியிருக்கிறார் இயக்குனர்.
திருமணத்துக்கு பின்னரும் ஆண்களிடம் தனது பழைய பாணியிலேயே சங்கீதா நடந்துகொள்வது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை குறைக்கிறது.
காதல் மனைவி, ஆச்சாரமான குடும்பம் என இரண்டுக்கும் இடையே சிக்கிக்கொண்டு பரிதவிக்கிறார் பிரேம். அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துவதை தவிர, இவருக்கு பெரிதாக வேலையில்லை.
சங்கீதை சுற்றியிருக்கும் எல்லா ஆண்களுமே 500 ரூபாய் ஞாபகத்திலேயே அலைவது அலுப்பு.
கிரீஷ் கர்னாட், கோட்டா சீனிவாசராவ், ஆசிஷ் வித்யார்த்தி, சங்கீதா, இளவரசு, எம்.எஸ்..பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலரும் தங்களது பங்கை உணர்ந்து செய்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் 'கண்ணனுக்கு என்ன வேண்டும்' பாடல் ரசிக்க வைக்கிறது. சீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
ஓர் சமூக அவலத்தை உருக்கமாக சொல்ல முயன்று, அதை சரியாக சொல்ல இயலாமல் போனாலும், நல்ல கதையை தேர்வு செய்ததற்காக இயக்குனர் சிவாவை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|