யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
தாம் தூம்
- பாபு
Dhaam Dhoom
PR
மொழி தெரியாத நாட்டில், கொலை வழக்கில் சிக்கிக் கொள்ள நேர்ந்தபோது, அதிலிருந்து ஓர் இந்திய இளைஞனால் மீள முடிந்ததா என்பதை படபடவென காட்ட முயற்சிக்கப்பட்ட படைப்பே 'தாம் தூம்' - மறைந்த இயக்குனர் ஜீவாவின் கடைசி படைப்பு.

மருத்துவரான ஜெயம் ரவி, பொள்ளாச்சிக்கு அக்கா அனு ஹாசனை பார்க்க வருகிறார். அங்கே கங்கனா ரனவத்தின் காதலில் விழுகிறார். சின்ன பிரச்சனைக்குப் பின் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது காதல்.

திருமணத்திற்கு சொற்ப நாட்கள் இருக்கும் சூழலில், மாஸ்கோ கான்ஃபரன்சுக்கு ஜெயம் ரவியை அனுப்புகிறது இந்திய அரசு.

சென்ற இடத்தில் கொலை பழியில் சிக்குகிறார். தான் நிரபராதி என்பதை நிரூபிக்க முடியாத நிலையில், போலீசிடமிருந்து தப்பித்து (வழக்கம்போல்) உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயலுகிறார்.

கங்கனா ரனவத்துடனான காதல் காட்சிகளில் இளம் ரவியாக திகழ்பவர், ரஷ்யா சென்றபின் புயல் ரவியாகிறார்.

இப்படத்திலும் ரவியின் மெருகு கூடியிருக்கிறது. போலீஸ், போதை கும்பல் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவர் தவிப்பதையும், ஆவேசத்தில் ஏறி மிதிப்பதையும் ரசிக்க முடிகிறது.

கிராமத்து கதாப்பாத்திரத்துக்கு சற்றும் பொருந்தாத நாயகி கங்கனா, கொஞ்சம் நடிக்க முயன்றிருப்பது ஆறுதலே.

இந்த நாயகியை ஓவர் டேக் செய்வதில் உஷாராக செயல்பட்டிருக்கிறார், மாஸ்கோவின் தமிழ் வக்கீலாக வரும் லஷ்மி ராய்.

இந்திய தூதரக அதிகாரியாக ஜெயராம். அமைதியான வில்லன். தூதரக பதவி என்பது நேர்மை மிகத் தேவைப்படும் ஒன்று. இவரோ போதை கும்பலுடன் பழக்கம் வைத்திருக்கிறார். இப்படியா இருக்கிறார்கள் இந்திய தூதரக அதிகாரிகள்? என்ற கேள்வி எழாமலில்லை.

பட்டத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் 'துல்லியம்' மீதான ஜீவாவின் காதல் தெரிகிறது. ரஷ்யாவின் அழகை அவரது கேமரா அள்ளியிருக்கும் விதம் சிறப்புக்குரியது. ஏமாற்றமளிக்காத இசையை வழங்கியிருக்கும் ஹாரிஸுக்கும் பாராட்டுகள்.

ரஷ்ய காட்சிகளுடன், கங்கனாவின் கிராமத்து சோகத்தை இணைத்திருப்பதில் தடுமாற்றம் தெரிகிறது.

குண்டடி பட்டபின், பைக்கில் கைகளை விரித்து கங்கனாவின் நினைவில் ஜெயம் ரவி லயிப்பது, எதார்த்தத்தை சிதைக்கவே செய்கிறது.

நம்ப முடிகிற ஆக்‌ஷனும், லயிக்க முடிகிற பாடல்களும் தாம்தூமின் பலம். இவற்றுக்காக, படத்தை ஒரு முறை ரசிக்கலாம்.

மொத்தத்தில் மறைந்த இயக்குனர் ஜீவாவின் ஆக்‌ஷன் கவிதையே 'தாம்தூம்'.

இதன் திரைக்கதையில் உள்ள எழுத்துப் பிழைகளை தவிர்த்திருந்தால், கவிதையின் வனப்பு மேலும் கூடியிருக்கலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெயம் கொண்டான்
நாயகன்
சத்யம்
பத்து பத்து
குசேலன்
ஆயுதம் செய்வோம் - விமர்சனம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...