யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
ஜெயம் கொண்டான்
- பாபு
Jayam Kondan
PR
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில் ஜெயம் கொள்வதே கதை.

லண்டன் வேலையை உதறிவிட்டு சென்னையில் சொந்தமாக தொழில் தொடங்க வருகிறார், வினய். அப்பாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கே தடையாக இருக்கும் அவரது வெளிநாட்டு வேலை, நடைமுறை உண்மையே.

தாம் சம்பாதித்து அனுப்பிய பணத்தை அப்பா சேமித்து வைத்திருப்பார் என்று நினைத்தால், அவர் இன்னொரு குடும்பத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்ற உண்மை வினய்க்கு தெரிய வருகிறது.

தொழிலுக்கு முதலீடாக இருக்கும் ஒரே சொத்து திருமங்கலத்தில் இருக்கும் வீடு. அதனை விற்க முயலும்போது, தடையாக வருகிறார் அப்பாவின் இன்னொரு குடும்பத்தின் வாரிசான லேகா வாஷிங்டன்.

அமெரிக்காவில் படிக்க விரும்பும் லேகா, லோக்கல் தாதா கிஷோரின் துணையுடன் வீட்டை விற்க முய‌ல்கிறார். அதனை தடுக்கிறார் வினய். இந்த பிரச்சனையில் ஏற்படும் திடீர் திருப்பத்தால், தாதாவுக்கும் வினய்க்கும் மோதல் வலுக்கிறது...

சராசரி இளைஞனுக்குரிய கனவு, ஆசா பாசங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது வினயின் கதாபாத்திரம். அதற்கு அவர் உயிர் கொடுத்திருக்கும் விதம் அலாதி. இயல்பான நடிப்புக்காக பிடியுங்கள் ஒரு பூச்செண்டை!

வினயின் தங்கை கதாப்பாத்திரத்தில் ஜொலிக்கிறார், லேகா. அன்பு நிறைந்த அழுத்தக்காரியாக இருக்கும் கதாப்பாத்திரத்தில் குணாதிசயத்திற்கு லேகா உயிரூட்டியுள்ளார்.

சொந்தக் குரலில் பேசியிருக்கும் பாவனா, வழக்கம் போல் தனது பாவனைகளில் மதிப்பெண்களை அள்ளிச் செல்கிறார்.

சாதாரணமான பேச்சு வழக்கில் இடையிடையே மட்டும் மதுரை தமிழ் மணக்கிறது.வசனத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வில்லன் கிஷோருக்கும் ஒரு காதல் வைத்திருப்பது கச்சிதம். சத்தம் போடாமல், காரியத்தை கச்சிதமாக முடிக்கும் வில்லனுக்கு கிளைமாக்ஸில் மட்டுமே வேலை.

நல்ல கதையம்சத்தில், நாயகனின் காதலும், தங்கை பாசமும் பிற்பகுதியில் தொய்வை ஏற்படுத்துகின்றன.விவேக்கின் பகுதிகள் மேலும் ஒரு குறை.அதேநேரத்தில், சந்தானத்தின் கூத்துகள் பிரகாசம்.

லேகா வாஷிங்டனின் அம்மாவாக வரும் மாளவிகா, தாதாவிடம் உதவி கேட்டு உதை வாங்கும் கொச்சின் ஹனீஃபா என சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் பலம்தான். 'நான் வரைந்த சூரியன்' பாடல் பார்க்கவும், கேட்கவும் பரவசம்.

குறையில்லாத சுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவும், நிறைவான வி.டி.விஜயனின் படத்தொகுப்பும் அபாரம்.

கதையோட்டம் பாதைமாறாமல் பிசிறின்றி கொண்டு செல்லப்பட்டிருந்தால், பூரண ஜெயம் கண்டிருப்பான், அறிமுக இயக்குனர் கண்ணனின் 'ஜெயம் கொண்டான்'!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தாம் தூம்
நாயகன்
சத்யம்
பத்து பத்து
குசேலன்
ஆயுதம் செய்வோம் - விமர்சனம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில் ஜெயம் கொள்வதே கதை...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...