யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
நாயகன்
- மு.பெருமாள்
Ritish
WD
முதல் படத்தில் தனது திரையுலக கனவு 'கானல் நீர்' ஆகிவிட்டாலும், இம்முறை அதீத தன்னம்பிக்கையில் ஆக்சன் அவதாரம் எடுத்து, ஆச்சரியப்படத்தக்க வகையில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் 'நாயகன்' ஜே.கே.ரித்தீஷ்.

ஓர் டி.எஸ்.பி.யின் வளர்ப்பு மகனான ஜே.கே.ரித்தீஷ் நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரி. துணிச்சலான, அதிரடி பார்ட்டியான அவர், நகரில் இளம் பெண்கள் அடிக்கடி காணாமல் போவதன் மர்மத்தை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்.

மற்றொரு நாயகனான ரமணா, தனது காதலியுடன் ஊரை விட்டு தப்பியோடுகிறார். அப்போது, அவருக்கு வரும் செல்பேசி அழைப்பில், தான் கடத்தப்பட்டிருப்பதாகவும், காப்பாற்றும்படியும் கெஞ்சுகிறார் டாக்டர் சந்தியா (சங்கீதா). இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் ரமணா.

ஓர் கட்டத்தில் இவர்கள் தேடி கொண்டிருப்பது ஓரே சமூக விரோத கும்பலைதான் என்பது தெரியவர, இருவரும் சேர்ந்து எப்படி துவசம் செய்கின்றனர் என்பது அனல் பறக்கும் க்ளைமாக்ஸ்.

ஹாலிவுட்டில் ஹிட்டடித்த 'செல்லுலர்'ரின் மற்றொரு காப்பி தான் படம் என்றாலும், அதற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்ததில்தான் ஜெயித்திருக்கிறார்கள்.

ஆனால், ஆரம்பக் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரைக்கும் எதற்கெடுத்தாலும் ஒரு பில்டப் தேவைப்படுகிறது ரித்தீஷுக்கு. பாட்டு, பைட்டு, பஞ்ச் டயலாக் என எல்லாமே அவருக்காகவே அமைக்கப்பட்டது தெரிகிறது.

படத்தோடு நம்மை ஒன்ற வைப்பது சங்கீதா வில்லன்களிடம் சிக்கி தவிப்பதும், அவரை காப்பாற்ற ரமணா பதைபதைப்புடன் அலைவதும் தான்.

கீர்த்தி சாவ்லா வழக்கமான ஆக்சன் பட நாயகி. பாடல் காட்சிகளில் வந்து ஆட்டம் போடுவதோடு சரி. மற்றபடி அவருக்கு பெரிய வேலை இல்லை. சங்கீதா சம்பந்தப்பட்ட காட்சிகள் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆனந்தராஜ், அதுவும் இரட்டை வேடங்களில் வந்து மிரட்டியிருக்கிறார். குறைசொல்ல முடியாத நடிப்பு. ஸ்ரீமன், ராதாரவி, விஜயபாபு என அனைவருமே தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான பில்டப் காட்சிகளே காமெடி இல்லாத குறையை போக்கிவிடுவதால் அதுபற்றி யாரும் அலட்டி கொண்டதாக தெரியவில்லை.

அதிரடி கதைக்கேற்ற குத்தாட்டம், காதை கிழிக்கும் இசைக்கு குறைவில்லை. ஒளிப்பதிவு ஓகே ரகம்.

'இருந்தாக்க அள்ளிக்கொடு இல்லாட்டி சொல்லிக்கொடு' பாடல் ரித்தீஷின் அரசியல் வாழ்வுக்கு(?) அடிபோடுவது நன்றாகவே தெரிகிறது. 'நிலா நிலா ஓடி வா...' பாடல் கேட்டு ரசிக்கலாம்.

தன்னைப் பற்றிய நக்கல், நையாண்டி விமர்சனங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, நானும் ஒரு வெற்றிப்பட நாயகன் என்பதை நிரூபித்திருக்கும் ரித்தீஷை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

'பில்டப்' 'நாயகன்'.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரோஜா
தாம் தூம்
ஜெயம் கொண்டான்
சத்யம்
பத்து பத்து
குசேலன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...