யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
பத்து பத்து
- பெரு
Sona
WD
ஒரு த்ரில்லர் கதையையும், சோனாவின் கட்டுக்கடங்காத கவர்ச்சியையும் மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்பட இயக்குனரான தலைவாசல் விஜய் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார் என்பதை தேடி புறப்படுகிறது போலீஸ் படை.

சந்தேகத்தின் பேரில் போலீஸ் பார்வை ஒவ்வொருவர் மீதும் விழ, நமக்கும் 'இவர்தான் கொலையாளியோ' என ஒவ்வொரு முறையும் நினைக்க தோன்றுகிறது.

தலைவாசல் விஜயின் மனைவி, வக்கீல், திருடன், ரவுடி, சவ ஊர்வலத்தில் நடனம் ஆடுகிறவர் என பல தரப்பினரையும் கடந்து, இறுதியில் கொலையாளியை மடக்குகிறது போலீஸ்.

வழக்கமான காதல், அடிதடியை ஓரம்கட்டிவிட்டு, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். படத்துக்கு கூடுதல் பலம் சோனாவின் கவர்ச்சி.

வயதான கணவரை ஓரம் கட்டிவிட்டு உறவுக்கார இளைஞனுடன் சல்லாபம் செய்யும் பெண்ணாக சோனா. தாராள கவர்ச்சி என்பதற்கு இவரை உதாரணமாக சொல்லலாம். அந்த அளவுக்கு கவர்ச்சி மழையில் திக்குமுக்காட வைக்கிறார்.

பிக்பாக்கெட் திருடனை போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் துரத்தும் காட்சிகள் காமெடி டிராக்.

கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் கடைசியில் அவனை கோட்டை விடுகிறது. ஆனாலும் அவனது முடிவு பரிதாபகரமாக முடிகிறது.

திரைக்கதையில் காட்டிய கவனத்தை கொஞ்சம், தொழிற்நுட்பங்களிலும் காட்டியிருந்தால் படம் இன்னும் சுவாரசியமாகி இருக்கும்.

சுமாரான இசை, தெளிவில்லாத ஒளிப்பதிவு ஆகியவை சலிப்பை தருகின்றன.

பத்துக்கு மூன்று.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குசேலன்
ஆயுதம் செய்வோம் - விமர்சனம்!
முனியாண்டி
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...