யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
ஆயுதம் செய்வோம் - விமர்சனம்!
- பெரு
ayuthamseivom
WD
காந்திய கொள்கைகளுடன் கமர்ஷியல் முலாம் பூசி இந்தியில் ஹிட்டடித்த படம் 'லகே ரஹோ முன்னாபாய்'. அதே பாதிப்பில், காந்திய கொள்கைகளுடன் தமிழ் மசாலா கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் உதயன்.

வழக்கம் போலவே இதிலும் சுந்தர்.சி.க்கு ரவுடி கெட்அப். அடிதடி, கலாட்டா என ஜாலிக்காக அடிக்கடி ஜெயிலுக்கு போய் வருபவர். இவருடன் சேர்ந்து லூட்டி அடிக்கிறார் கான்ஸ்டபிள் விவேக்.

போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததற்காக தண்டனை விதித்து இருவரையும் காந்தி மியூசியத்துக்கு அனுப்புகிறது நீதிமன்றம். அங்கு இவர்கள் பண்ணும் அலம்பலில் காமெடியாய் நகர்கிறது முதல் பாதி.

அதன் பின்னர், ஊர் திரும்பும் சுந்தர்.சி.யுடன் ஏற்படும் ஒரு கைகலப்பில் விஜயகுமார் இறக்கிறார். அவரது மரணம் மனதை மாற்ற வில்லன் மணிவண்ணனுக்கு எதிராக திரும்புகிறார் சுந்தர்.சி.

மணிவண்ணனுக்கு தண்டனை வாங்கி தர துடிக்கும் அவர், அடிதடியில் சாதிக்க முடியாததை இறுதியில் அஹிம்சை வழியில் சாதித்து காட்டுகிறார்.

காந்தி மியூசியத்தில் மாளவிகாவை அழைத்து வந்து குத்தாட்டம் போடுவது, அவர் மூலமாக காந்திய புத்தகங்களை விற்பது போன்றவை கலகலப்பான இடங்கள்.

தன்னை நிர்வாணமாக பார்த்துவிட்டதால், சுந்தர்.சி. மீது காதல் பிறக்கிறது அஞ்சலிக்கு. அப்புறமென்ன, வழக்கம் போல் கனவில் டூயட் பாடி கவர்ச்சி காட்டிவிட்டு போகிறார்.

அண்ணனை கொன்றவனை பழிவாங்கும் முடிவுடன் விறைப்பாக வரும் அசிஸ்டெண்ட் கமிஷனர் நெப்போலியன் ஏதோ சாதிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால், ம்கூம்.... ஏமாற்றிவிடுகிறார்.

க்ளைமாக்சில் சுந்தர்.சியின் அகிம்சை போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் சூடுபிடித்து, கடைசியில் ஊரே திரண்டு ஆதரவு தரும் காட்சிகள் விறுவிறுப்பை கூட்ட தவறவில்லை.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'இன்னும் ஒரு வானும்...', 'கண்டோம் கண்டோம்', 'மூணு காசு முட்டாயி...' பாடல்களை ரசிக்கலாம். செல்வராஜின் ஒளிப்பதிவு ஓ.கே.

நாசர், சுகன்யா, விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்துக்கு பக்கபலம்.

கதையை வலுவாக்கி இருந்தால், ஆயுதம் இன்னும் கூர்மையாக அமைந்திருக்கும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முனியாண்டி
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
தசாவதாரம்
காத்தவராயன்
பாண்டி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...