யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
முனியாண்டி
- பாபு
Muniyandi
WD
அப்பா - மகன் உறவை 'எம்மகன்' மூலம் அழுத்தமாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்த திருமுருகனின் மற்றொரு படைப்பே 'முனியாண்டி'.

இதுவும் ரு விதத்தில் அப்பா - மகன் உறவைச் சொல்லும் படம்தான் என்றாலும், 'எம்மகனை' மனதில் வைத்துக்கொண்டு திரையரங்குக்குச் சென்றால் மிஞ்சுவது ஏமாற்றமே.

படம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, 'எஞ்சிய இரண்டே கால் மணி நேரம் இருக்கையில் எப்படி நிலைத்து உட்காரப் போகிறோம்' என்ற அலுப்பு ஏற்பட்டு விடுகிறது.

விலங்கியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் கிராமத்து கல்லூரி மாணவன், பரத். தான் படிக்கும் கல்லூரியிலேயே உணவு விடுதி நடத்தும் தந்தையாக பொன்வண்ணன்.பரத்தின் தாயாராக தாரா.

தங்களுடைய மூத்த மகனை காதல் விவகாரத்தால் பலிகொடுத்த பொன்வண்ணனும், தாராவும் இளைய மகன் பரத்தை பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள்.

ஆனால், வழக்கம் போல் பெற்றோரின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறுகின்றன. பரத் படிக்கும் கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவியாக வருகிறார், அந்த கிராமத்தின் பெரும்புள்ளி ஒருவரின் மகள் பூர்ணா.

இனி சொல்வதற்கு ஏதுமில்லை, தமிழ் மசாலா சினிமா விதிகள் பிழறாதபடி, பரத் - பூர்ணா இடையே கிண்டல், கேலி, மோதல், காதல்... இறுதியில் சுபம்!

முனியாண்டி... கிராமத்தின் அடையாளம், மூன்றாமாண்டு கல்லூரியின் அடையாளம். கிராமத்தையும், கல்லூரி வாழ்க்கையையும் கலந்து சொல்லும் படம்... இவ்வாறெல்லாம் விளம்பரப்படுத்தியிருந்த இயக்குனர், தன் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்காதது, மூன்றாம் ஆண்டு மாணவனை தேர்ச்சி பெறச் செய்யவில்லை.

'ராகிங்' என்ற போர்வையில் கிராமத்து கல்லூரி மாணவர்கள் செய்யும் சேட்டைகள், ஆங்காங்கே தூவிவிடப்பட்ட சாதிச் சமாச்சாரங்கள்... அவ்வப்போது கூச்சலிடும் பெரும்புள்ளி வில்லன்கள், மருந்தைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் மல்க வசனம் பேசும் தந்தை பொன்வண்ணன், தாயார் தாரா... எதுவுமே எவருமே மனதில் பதியவில்லை.

நகைச்'சுவை'யில்லாத வடிவேலு. இயக்குனரின் எதிர்பார்ப்பை மட்டுமை பூர்த்தி செய்திருக்கிறது, பரத்தின் நடிப்பு. வித்தியாசப்படுத்த முயலாத வித்யாசாகர் இசை. எனினும், வைத்தியின் ஒளிப்பதிவு வெகுவாக மதிப்பெண்களைப் பெறுகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 'முனியாண்டி' யோசிக்க வைத்துள்ள படம்தான்... 'வேறு படத்துக்கு போயிருக்கலாமோ..!' என்று.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
தசாவதாரம்
காத்தவராயன்
பாண்டி
காதல் என்றால் என்ன
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...