|
| சுப்பிரமணியபுரம் | |
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக வைத்து சிலர் அவர்களை வன்முறை பாதைக்கு திருப்புவதையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
அழகன், பரமன், காசி, சித்தன், தும்கான் ஆகிய 5 பேரும் நண்பர்கள். இவர்களில் 2 பேருக்கு, அரசியல்வாதி சோமுவின் மகள் துளசி மீது காதல்.
இதன் காரணமாக, அவருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கும் நண்பர்கள், துளசியின் சித்தப்பாவின் தூண்டுதலால் சோமுவின் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்டி கொலையாளி ஆகின்றனர். சிறைக்கு செல்லும் இவர்களை துளசியின் சித்தப்பா ஜாமீனில் எடுக்காமல் கை கழுவுகிறார்.
இதனால், ஆத்திரமாகும் அவர்கள் சிறையிலிருந்து கொலை வெறியுடன் வெளியே வர, துளசியின் காதல் விவகாரம் தெரிந்து, அழகனை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார் அரசியல்வாதி. முடிவு என்ன என்பது ரத்தம் தெறிக்கும் க்ளைமாக்ஸ்.
28 ஆண்டுகளுக்கு முந்தைய கதை களம் என்பதால், ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் சசிகுமார். நடிப்பிலும் இவர் தனி முத்திரை பதிக்கிறார்.
பழைய ஸ்டெப் கட்டிங், பெல்பாட்டம், கண்ணாடி, பெரிய காலர் சட்டை, தாடி என எல்லா விஷயங்களையும் அச்சு அசலாக அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார்.
நண்பர்களாக வரும் ஜெய், கஞ்சா கருப்பு, மோகன், மாரி அனைவரும் மிகப் பொருத்தமான தேர்வு. வில்லனாக வருபவர் சமுத்திரக்கனி. கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து மிக சரியாக செய்திருக்கிறார். ஓர் அழகான காதல் காவியம் என நம்பி சென்றால், அளவுக்கு அதிகமான ரத்தக்களறி காட்சிகள் சிறிது நெருட வைக்கின்றன. என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதையும், வேகமான காட்சியமைப்பும் அந்த குறையை மறக்கடிக்கின்றன.
கஞ்சா கருப்பு, இதில் குணச் சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். நாயகி ஸ்வாதி, பார்வையாலேயே மனதை கொள்ளை கொள்கிறார். கடைசி காட்சியில் காதலனை காட்டிக் கொடுத்துவிட்டு கதறும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.
யதார்த்தமான வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம். ஜேம்ஸ் வசந்தன் இசையில் 'கண்களிரண்டில் பாடல்...' மெலோடியை ரசிக்கலாம். கதிரின் கேமரா கண்களுக்கு குளுமை.
மதுரை மண்ணை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறும் என்பதை இந்த படமும் உறுதி செய்திருக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|