|
| வல்லமை தாராயோ | |
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே 'வல்லமை தாராயோ'
தனது உறவுக்கார இளைஞரை காதலிக்கிறார் சாயாசிங். இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மகள் சாயாசிங்கை கட்டாயப்படுத்தி பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் ஆனந்தராஜ்.
திருமணமாகி சென்னை வந்த பின்னரும் காதலன் நினைவில் வாடும் சாயாசிங், பார்த்திபனை வெறுக்கிறார்.
மனைவி மீது அன்பு மழை பொழியும் பார்த்திபன், அவரது மனமாறுதலுக்காக காத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவியின் விருப்பப்படியே விவகாரத்தும் கொடுக்கிறார்.
கணவரிடமிருந்து பிரிந்து காதலனை மணக்க முயற்சிக்கையில், காதலனோ இன்னொரு பெண்ணை மணக்க தயாராகிறார்.
அதன்பிறகு தான் பார்த்திபனின் அருமை தெரிய வருகிறது. என்றாலும், மீண்டும் கணவருடன் சேர ஈகோ தடுக்கிறது. இந்நிலையில் சாயாசிங் என்ன முடிவு எடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.
ஹீரோ பார்த்திபன் என்றாலும், கதை முழுவதும் சாயாசிங்கை மையப்படுத்தியே நகர்கிறது. காதலனை எண்ணி ஏங்குவது, கணவரிடம் கோபத்தில் வெடிப்பது, இறுதியில் யதார்த்தம் புரிந்து உருகுவது என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் சாயாசிங்.
என்றாலும், பல இடங்களில் அவரது பாத்திரப்படைப்பு மிகைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு எழாமல் இல்லை. பல்வேறு கனவுகளுடன் கல்யாணம் செய்யும் பார்த்திபன் சாயாசிங்கின் நடவடிக்கைகளினால் ஏமாற்றம் அடைவது, விவாகரத்து கொடுப்பது என மனதை அள்ளுகிறார். என்றாலும் பெரும்பாலான இடங்களில் அப்படியே 'மவுனராகம்' பாதிப்பு.
பார்த்திபனின் ஒரு வரி காமெடி இந்த படத்திலும் ஒர்க்- அவுட் ஆகிறது. நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வக்கீல் சுமத்தும்போது ஒட்டுமொத்தமாக பரிதாபத்தை அள்ளுகிறார்.
பார்த்திபன் - வேலைக்காரி உரையாடலை சாயாசிங் தவறாக புரிந்து கொள்வது, பார்த்திபன் தன்னை பின் தொடர்வதாக நினைப்பது போன்ற காட்சிகளில் பளிச்சிடுகிறார் இயக்குனர் மதுமிதா.
காதலன் ஸ்ரீகாந்த் வேறு பெண்ணை மணக்கவிருக்கும் தகவல் சாயாசிங்கிற்கு தெரியவருவதும், அதன் பிறகு அவருக்கு கணவன் மீது பாசம் பொங்குவதும் செயற்கைத்தனமான காட்சியமைப்புகள்.
வழக்கமான கருணாஸ் காமெடி கொஞ்சம் ரிலாக்ஸ் தருகிறது. பரத்வாஜின் இசையும், ராஜராஜனின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம்.
கதையிலும், காட்சியமைப்பிலும் இன்னும் கொஞ்சம் புதுமைகளை புகுத்தி, கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கி, க்ளைமாக்சையும் கவிதையாக்கி இருந்தால், 'வல்லமை தாராயோ' வலுவாக இருந்திருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாரோயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|