|
| தசாவதாரம் | |
அப்பாவியாய் வார்த்தைகளை உதிர்க்கும் முஸ்லிம் இளைஞன், அசராத விஞ்ஞானி, தெலுங்குகார உளவுத்துறை அதிகாரி...
யப்பா... இவர்களில் எங்கே கமல் இருக்கிறார் என தேட வேண்டியிருக்கிறது. 'தத்ரூபம்' என்பதற்கு கமல் என்று பொருள் போலும்! ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பட்டிஷன் போல் ஆகிவிடாத ஒப்பனை மற்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்கான சிரத்தைக்காகவே, பத்து அவதாரங்களை தரிசிக்கலாம்.
வெவ்வேறு கதாப்பாத்திரத்துக்கும் அவற்றுக்கு உரிய பாவனை, சைகை மொழி, பேச்சு என ஒவ்வொன்றிலும் தனித்துவத்தைக் காட்டியிருப்பது மகத்துவம்.
பத்து கமலில், வைணவ இளைஞனும், தலித் இளைஞனும், பல்ராம் நாயுடும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிவிடுகின்றனர். கமலஹாசனின் கலையுலக வாழ்க்கையில், 'தசாவதாரம்' ஒரு மைல்கல்!
கமலஹாசனின் திரைக்கதை, அவரது அனுபவத்தையும், சினிமா அறிவையும் வெகுவாக வெளிப்படுத்துகிறது.
அடுத்து சபாஷ் பெறுபவர், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். பத்து கதாப்பாத்திரங்களைக் குழப்பாமல், படத்தை நகர்த்தியதிலேயே அவரது முழு திறமையும் பளிச்சிடுகிறது.
கமலுக்கு உகந்த நாயகியாக, நடிப்பிலும் சளைக்காதவராக வரும் அசின், ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்; வழக்கம்போல், ஊறுகாயாக காட்டப்பட்டுள்ளார், மல்லிகா ஷெராவத்.
நெப்போலியன், நாகேஷ், பி.வாசு, ரகுராம், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.
பத்து அவதாரங்களுக்கு தனித்துவம் ஏற்படுத்தித் தந்த ஒப்பனையை பாராட்டியே ஆகவேண்டும். ரவி வர்மனின் ஒளிப்பதிவில் உலகத் தரம் மிளிருகிறது. படத்தின் கலை இயக்கம், படத்தொகுப்பு, நடனம், பாடல்கள், சவுண்ட் என அனைத்துப் பிரிவுகளிலும் முத்திரைப் பதிக்கப்பட்டுள்ளது.
கிராஃபிக்ஸை உருப்படியாக பயன்படுத்திய தமிழ்த் திரைப்படங்களில், தசாவதாரம் முன்னிலை வகிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்கு 'சுனாமி' காட்சிகள் சான்று. ஹிமேஷ் ரேஷமையாவின் இசையில் 'முகுந்தா', 'கல்லை மட்டும் கண்டால்' ஆகியவை நச். தேவிஸ்ரீ பிரசாத்தின் ரீரெக்கார்டிங், ஸ்ட்ராங்க்!
கதைப்படி, பத்து கதாப்பாத்திரத்துக்கும் ஒரு நடிகர் மட்டுமே நடித்திருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பத்து கதாப்பாத்திரத்திலும் ஒருவர் தான் நடித்தார் என்பது தெரியாத அளவுக்கு படமாக்கப்பட்டிருப்பதால், அந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
தொழில்நுட்பத்துக்கு இணையாக, கதைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால், படம் முழுமையாக சோபித்திருக்குமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.
ஒட்டுமொத்தமாக பார்ப்போமோனால், எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றாமல் அளிக்கப்பட்ட தரிசனமே 'தசாவதாரம்'!
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|