|
| காத்தவராயன்
| |
சாராயம், போதைப் பொருள் சமாச்சாரங்களை சமூக அக்கறையுடன் அணுக முயன்றிருக்கிறார் இயக்குனர் சலங்கை துரை.
சமூக சேவையாகவே கருதி ஒகேனக்கலில் சாராயம் காய்ச்சும் கரண், சிறை செல்ல காரணாமாகிறார், நாட்டு நலப்பணித் திட்ட மாணவியான விதிஷா.
தனது பொறுப்பான செயல்பாடுகளால், சென்னையில் ஒரு போதைப் பொருள் கும்பலிடம் சிக்கி, விதிஷாவும் சிறைக்குச் செல்ல நேர்கிறது.
நாயகியின் சமூக அக்கறையை உணர்ந்த கரண், அவரைக் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளும், கடைசியில் எல்லோரும் எதிர்பார்த்த வழக்கமான சுபமுமே மீதம்.
சாராயம் காய்ச்சும் முரட்டு ஆசாமி கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் கரண். 'போதையில் இருப்பவன் குழந்தைக்குச் சமம்' என்றெல்லாம் அவர் அடிக்கும் லூட்டிகள் ஏராளம். வெவ்வேறு பாவனைகளால் பாராட்டுக்களைப் பெறக்கூடிய வாய்ப்புள்ள கதாப்பாத்தில் நாயகி விதிஷா ஓரளவு மிளிருகிறார்.
அவ்வப்போது 'கிக்' ஏற்றுவதற்காக வலம் வந்து செல்லும் 'சுந்தரா டிராவல்ஸ்' ராதா கதாப்பாத்திரம் சொதப்பல்.
பாட்டியின் இன்சூரன்ஸ் மூன்று லட்ச ரூபாயை கந்து வட்டிக்கு விட்டு, கண்டபடி மொத்து வாங்குகிறார் வடிவேலு. ஃபார்முலா காமெடியில் இருந்து விடுபடுவது அவருக்கு நல்லது.
அடுத்து என்ன நடக்கும் என எளிதில் ஊகிக்கக் கூடிய வழக்கமான திரைக்கதை, முன்னுக்குப்பின் முரணான காதல் பகுதிகள் என பாதகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை மயக்க வைக்காமல் போனாலும், கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு ஓரளவு கிறங்க வைக்கிறது.
சாராய காத்தவராயனின் தலைவலியில் சமூக அக்கறை மறந்தே போய்விடுகிறது!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|