|
| பாண்டி | |
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'!
நல்ல பெயர் எடுக்கும் மூத்த மகன். ஊதாரித்தனத்தை மட்டும் பின்பற்றும் இளைய மகன். இவ்விருவரின் நிலையையும் விவரிக்கும் ஆரம்ப காட்சிகள். பின்னர், தறுதலை மகன் திருந்தி குடும்பத்தைக் காப்பாற்றும் போது, எதிர்பாராத சோக நிகழ்வு. இறுதியில் பழிவாங்கலோடு முடிகிறது கதை!
நாயகன் லாரன்ஸ், தனது பாத்திரத்துக்கு ஏற்ற பாவங்களைக் காட்ட முடியாமல் தவிக்கிறார். தனித்தன்மையுடன் கூடிய நடிப்பு வரமாட்டேன் என்கிறது.
இன்ஸ்பெக்டர் இளவரசின் மகளாக வரும் நாயகி சினேகாவோ, இளைஞர்களை சுண்டியிழுக்க முயற்சித்துள்ளார். தண்ணி அடித்துவிட்டு அவர் போடும் லூட்டியில் தள்ளாடுகிறது திரையரங்கம். நமீதாவும் தானும் படத்தில் நடித்திருப்பதாக 'காட்டி'ச் சென்று விடுகிறார்.
நடுத்த வர்க்கத்தில் உழலும் ௦வாத்தியார் வேடத்தில் வரும் நாசர், தனது சின்ன கதாப்பாத்திரத்தில் எளிதாக நிறைவு செய்துவிட்டுச் செல்கிறார். நாயகனின் அம்மாவாக வந்து அழுது, பின்னர் போய்விடுகிறார் சரண்யா.
கஞ்சா கருப்பும் வையாபுரிம் காமெடியில் சோபிக்கவில்லை. அவர்கள் அவ்வப்போது கிச்சுகிச்சு மட்டுமே மூட்டுகின்றனர். மயில்சாமியின் தொப்புள் சமாச்சாரம் வயிறை பதம் பார்க்கும் சிரிப்பு.
இந்தப் படத்துக்கு இதுபோதும் என்பது போல பாடல்கள் அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. ஆனால் பாடல் காட்சிகள் காதுகளை விட கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துக்கின்றன. சினேகா, நமீதா வாழ்க!
எந்த விதத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத வகையில் இயக்குனர் ராசு மதுரவனின் திரைக்கதை அமைந்திருந்தாலும், நாயகன் பத்தே நிமிடத்தில் பணக்காரன் ஆகாமல், வெளிநாட்டில் குப்பை பொறுக்கும் பகுதி பளீச் விவகாரம்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், 'பாண்டி' ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | | அரசாங்கம் | | நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'.
வழக்கம்போல்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|