யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
காதல் என்றால் என்ன
- பெரு
kadal ental enna
WD
தாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து(!) காட்டியிருக்கிறார் இயக்குனர்.

கவர்ச்சியான பரத நாட்டிய ஆசிரியை தியா. இவரது அழகில் வயது வித்தியாசமின்றி அத்தனை ஆண்களும் கிறங்கிப் போகின்றனர். இதில் ரொம்பவே உணர்ச்சி வசப்படும் ஒரு இளைஞன், தியாவுக்கு நடுரோட்டில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க, விவகாரம் போலீசுக்கு போகிறது.

தியாவின் அழகுக்கு முன்னால் இன்ஸ்பெக்டர் சரண்ராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன?. தியாவின் கவர்ச்சியில் சொக்கிப் போகும் சரண்ராஜ், முத்தம் கொடுத்த இளைஞனை அடித்தே கொல்கிறார். அதோடு, தியாவை தானே அடைய நினைக்கிறார். இதற்காக தியாவை கடத்தி வீட்டுச்சிறையில் வைக்கிறார்.

இதற்கிடையே, தியாவுக்கும், நாயகன் வீராவுக்கும் இடையேயான காதல் தெரியவர, வீராவை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார் சரண்ராஜ். அவரிடமிருந்து போராடி தியாவை எப்படி மீட்கிறார் வீரா என்பது களைமாக்ஸ்.

படத்தின் ஹீரோ வீரா என்கிறார்கள். ஆனால் சரண்ராஜை மையப்படுத்தியே நகர்கிறது கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வில்லனாக வந்து உறுமுகிறார் சரண்ராஜ். உடலில் பழைய மிடுக்கு தெரிந்தாலும் முகத்தில் முதுமை படர ஆரம்பித்திருப்பதை தவிர்க்க முடியவில்லை.

தியாவுக்கு இது கடைசி படமாம். அதனாலோ, என்னவோ ஒட்டுமொத்த அழகையும் வஞ்சனை இல்லாமல் காட்டிவிட்டு போகிறார். இதில் ஒரு குளியல் காட்சி வேறு.

பரதம் கற்றுத்தரும் காட்சியில் நளினத்தையும், சரண்ராஜிடம் சிக்கி தவிக்கும்போது சோகத்தையும் அகன்ற கண்கள் வழியே அழகாக வெளிப்படுத்துகிறார் தியா.

நாயகன் வீரா, நிறைய காட்சிகளில் தடுமாறுகிறார். சண்டைக் காட்சிகளில் அளவுக்கு மீறிய சினிமாத்தனம். காதல் காட்சிகளில் மட்டும் புகுந்து விளையாடி இருக்கிறார்.

மயில்சாமி, சிங்கமுத்து, காளிமுத்து கோஷ்டியினர் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டு சிரிக்கலாம்.

'அலையடிக்குது' என்ற ஏடாகூடாமான படத்தின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்த இயக்குனர் காளிமுத்துதான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். வலு இல்லாத கதையும், புதுமை இல்லாத காட்சியமைப்புகளும் பெரும்பாலான இடங்களில் நெளிய வைக்கின்றன.

படத்துக்கு 'கவர்ச்சி என்றால் என்ன' என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரசாங்கம்
சிலந்தி
குருவி
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அரசாங்கம்
நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'. வழக்கம்போல், தனியொரு ஆளாக வில்லன் கும்பலை மடக்கும் கேரக்டர்தான் என்றாலும், இதில் சில சுவாரசிய திருப்பங்கள் சேர்த்து...
சிலந்தி
குருவி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...