|
| அரசாங்கம் | |
நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'.
வழக்கம்போல், தனியொரு ஆளாக வில்லன் கும்பலை மடக்கும் கேரக்டர்தான் என்றாலும், இதில் சில சுவாரசிய திருப்பங்கள் சேர்த்து விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.
நாட்டின் முக்கிய விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
இதை கண்டுபிடிக்க வரும் காவல்துறை அதிகாரி பிஜூமேனன், விமானத்திலேயே திடீரென மாயமாகிறார்.
இதை கண்டு பிடிக்க தனி ஆளாக கிளம்பும் விஜயகாந்த் எப்படி வில்லன் கூடாரத்தை சிதறடிக்கிறார் என்பது அனல் பறக்கும் க்ளைமாக்ஸ்.
முந்தைய படங்களைப் போலவே மிடுக்காக, முறைப்பாக இருக்கிறார் விஜயகாந்த். அடிதடியில் பின்னுகிறார். நவநீத் கவுர், ஷெர்லின் பிண்டோ என இரு இளம் நாயகிகளுடன் டூயட் பாடுகிறார். என்றாலும், பழைய சுறுசுறுப்பையும், குறும்பையும் காணமுடியவில்லை.
பல இடங்களில் அவரது முற்றிய முகம், முதுமையை காட்டிக்கொடுப்பதை காமிரா கவனிக்க தவறிவிட்டது.
படத்தில் பிஜூமேனனுக்கு இரட்டைவேடம். காவல்துறை அதிகாரியாகவும், தீவிரவாதியாகவும் அவர் வித்தியாசத்தை காட்டினாலும் மலையாள வாடை கலந்த உச்சரிப்பால் அழுத்தம் இல்லாமல் போகிறது அவரது பாத்திரப் படைப்புகள்.
இளமைத் துள்ளும் இளம் நாயகிகள் இருவருமே கவர்ச்சிக்கு மட்டும் பயன்பட்டிருக்கின்றனர். காது கேளாத நவ்தீப் கவுரும், அவரது உயிர் தியாகமும் நெஞ்சை கனக்க வைக்கிறது.
ஆரம்பக் காட்சிகளில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் பின்னர் தொய்வடைந்து மீண்டும் இடைவேளைக்கு பிறகு சூடுபிடிக்கிறது.
க்ளைமாக்ஸ் ரயில் சண்டை, மனிதர்களை தின்னும் பன்றிகளிடமிருந்து விஜயகாந்த் தப்பிப்பது போன்றவை புதிய கோணத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் பெரும்பாலான காட்சிகள், முந்தைய பல படங்களை நினைவுப்படுத்தினாலும், பஞ்ச் டயலாக்குகள், புள்ளிவிவரப் பட்டியல்கள் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார்.
இயக்குனர் மாதேசுடன் கூட்டணி சேர்ந்து தனது ராஜாங்கத்தை மீண்டும் நிலை நிறுத்தியிருக்கிறார் விஜயகாந்த்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|