யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
சிலந்தி
- பெரு
Monica
WD
கால் சென்டர், ஐடி பெண்கள் மீது என்ன கோபமோ இயக்குனருக்கு. ந்த கலாச்சாரத்தின் பாதிப்புகளை கிளாமர் கலந்த ஒரு த்ரில்லர் கதை மூலம் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

அறிமுக நாயகன் முன்னா, பெயரளவுக்கு தான படத்தில் ஹீரோ. மற்றபடி, மோனிகாவும், அவரது தாராள கவர்ச்சியும் தான் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புதுமணத் தம்பதிகளான முன்னா- மோனிகா ஜோடி தேனிலவுக்காக ஓர் உல்லாச தீவுக்குள் செல்கின்றனர். வயாக்ரா வாங்குவதற்காக முன்னா தீவைவிட்டு வெளியே வர, மோனிகாவை ஒரு உருவம் பயமுறுத்துகிறது.

இதற்கிடையே, மோனிகாவின் தோழிகள் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர்.

தீவுக்கு திரும்பிவரும் முன்னாவிடம் மர்ம உருவம் குறித்து சொல்கிறார் மோனிகா. முதலில் நம்ப மறுக்கும் முன்னாவே, பிறகு அந்த உருவத்தை கண்டு அலற, அந்த மிரட்டல் உருவம் ஏன், எதற்காக அவர்களை துரத்துகிறது என்பது திடுக் திடுக் க்ளைமாக்ஸ்.

தேனிலவுக்கு செல்லும் புதுப்பெண்ணின் உணர்வுகளை கண்கள் மூலமே வெளிப்படுத்துகிறார் மோனிகா. 'அழகி'யில் பாவாடை தாவணியில் அழகு காட்டிய மோனிகா, இதில் பெரும்பாலான காட்சிகளில் பாவாடை- ஜாக்கெட்டில் வந்து நிஜ அழகை காட்டுகிறார்.

ஆடையை போலவே, கொஞ்சம் உடம்பையும் குறைத்திருக்கலாம். வில்லன் சந்துரு, புதுமுகம் என்று கொல்ல முடியாத அளவுக்கு மிரட்டியிருக்கிறார்.

ஐடி, கால் சென்டர் போன்ற ஹை டெக் கலாச்சாரத்தினால் ஏற்படும் விபரீதங்களை சொல்ல வந்திருக்கும் ஆதி, அதற்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் அழுத்தமான பல காட்சிகளை சேர்த்திருக்கலாம்.

கார்த்தியின் இசையில், 'சந்தனவேட்டைக்காரா....' பாடல் பரவாயில்லை ரகம். பவுசியா பாத்திமாவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.

சிலந்தி, 'த்ரில்லர்' விரும்பிகளை ஈர்க்கும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குருவி
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
தரகு
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...