|
| குருவி | |
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து போனால் ரொம்பவே ஏமாற்றிவிட்டார்கள்.
மணிவண்ணனுக்கு மூன்று மனைவிகள்; கடன் தொல்லை வேறு. திடீரென மாயமாகி விடுகிறார். குடும்பத்தை தவிக்கவிட்டு விட்டு அவர் ஓடிவிட்டதாக நினைக்கிறார் அவரது மகன் விஜய்.
மணிவண்ணன் வாங்கிய கடனுக்கு அவரது வீடும் பறிபோகும் அபாயம். இந்நிலையில் மணிவண்ணனுக்கு கொடுக்கப்பட்ட செக் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆக, அதை கொடுத்தவரின் ஆலோசனையின் பேரில் சுமனை சந்திப்பதற்காக 'குருவி'யாக மலேசியா பறக்கிறார் விஜய்.
அங்கு சுமனுடன் நடக்கும் மோதலில் அவரது விலை மதிப்பில்லாத வைரத்தையும், அவரது அழகான தங்கை த்ரிஷாவும் லபக்கி கொண்டு வருகிறார் விஜய்.
அவரை தேடி சென்னை வரும் சுமன், விஜயை தாக்கி வைரத்தை மீட்பதோடு மணிவண்ணனை கொத்தடிமையாக வைத்திருப்பதையும், முடிந்தால் மீட்கும்படியும் சவால் விட்டு செல்கிறார்.
அதன் பின், தந்தையை மீட்க ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பாவுக்கு பறக்கும் விஜய், வில்லன்களுடன் மோதி, மணிவண்ணன் உள்ளிட்ட கொத்தடிமைகளை மீட்பதோடு த்ரிஷாவையும் கைப்பிடிக்கிறார்.
ஒரு அப்பாவி பெண்ணை காப்பாற்றும் ஒன் லைன் ஸ்டோரியையே 'கில்லி'யாக சொல்லி அடித்த விஜய் - தரணி கூட்டணி, ஒரு கொத்தடிமை கூட்டத்தையே மீட்கும் விறுவிறுப்பான இந்த கதையில் இன்னும் பல சிக்ஸர்கள் ஷாட்களை அடித்திருக்கலாம்.
ஆனால் என்ன நெருக்கடியோ, திரைக்கதை அமைப்பில் ரொம்பவே கோட்டைவிட்டிருக்கிறார் தரணி.
விஜய்க்கு வழக்கமான துறுதுறு வேடம்; அனல் பறக்கும் ஆக்ஷ்னில் அப்ளாஸ்களை அள்ளினாலும், ஓடும் ரயிலை பிடிப்பது, பில்டிங் விட்டு பில்டிங் தாவுவது போன்ற ஓவர் பில்டப் காட்சிகள் அவரை பலவீனப்படுத்துகின்றன.
த்ரிஷா, நேரம் காலம் தெரியாமல் விஜயுடன் காதல் மொழி பேசும் அழகு பொம்மை. வழக்கம்போல் அளவான கவர்ச்சியுடன் வந்து ஆட்டம் போடுவதோடு சரி. விஜயின் கைப்பிடித்துக்கொண்டு அவர் ஓடும் காட்சி எல்லாம் அப்படியே முந்தைய படத்தின் சாயல்.
காமெடி என்ற பெயரில் விவேக் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் ஒரே காமநெடி. முற்பாதியில் விஜயுடன் சேர்ந்து கலகலக்க வைப்பவர் பிற்பாதியில் எஸ்கேப். சுமன், ஆதிஷ் வித்யார்த்தி போன்ற வில்லன்கள் காட்டுக்கத்தல் கத்துவதில் காது கிழிகிறது.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் சுமார். கோபிநாத்தின் ஒளிப்பதிவும் ஓரளவுக்கு ஆறுதல்.
விஜய், த்ரிஷா போன்ற முன்னணி நட்சத்திரங்கள், பிரமாண்டமான தயாரிப்பு நிர்வாகம் ஆகியவை இருந்தும் 'கில்லி' அளவுக்கு 'குருவி' உயரே எகிற முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|