யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
சந்தோஷ் சுப்பிரமணியம்
- பெரு
Santosh-subramani
WD
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'வை தான் தமிழில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஆகியிருக்கிறார். கண்டிப்பான பெற்றோருக்கும், கட்டுப்படாத இளைஞர்களுக்கும் சேர்த்தே நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறார்.

கண்டிப்பான குடும்பத் தலைவர் பிரகாஷ் ராஜ். குழந்தைகளின் உணவு, உடை, படிப்பு என ஆரம்பித்து வாழ்க்கைத் துணை வரை அவர் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்டாக வேண்டும்.

அதன்படியே ஜெயம் ரவியின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யும் பிரகாஷ் ராஜ், திருமணத்துக்காக விஜயகுமாரின் மகள் கீரத்தை பேசி முடிக்கிறார்.

வழக்கம்போல் அப்பாவின் உத்தரவுக்கு கட்டுப்படும் ஜெயம் ரவியின் கண்ணில் சிக்குகிறார் துறு துறு ஜெனிலியா. இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஆரம்பமாக, ஜெனிலியாவைதான் கல்யாணம் செய்வேன் என அப்பாவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்குகிறார் ரவி.

இதனால் கடுப்பாகும் பிரகாஷ்ராஜ், ஒரு வாரம் ஜெனிலியாவை வீட்டில் தங்க வைப்பது என்றும், அதற்குள் ஜெனிலியாவின் நடவடிக்கை பிடிக்காவிட்டால் அவரை மற்ந்துவிட வேண்டும் என்றும் ஜெயம் ரவிக்கு கண்டிஷன் போடுகிறார்.

ஒரு வார முடிவில், பிரகாஷ் ராஜ் என்ன சொல்வாரா என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, 'எனக்கு பிடிக்கலை' என்று சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார் ஜெனிலியா. அவர்களது காதல் கைகூடியதா என்பது சுவாரசிய க்ளைமாக்ஸ்.

முந்தைய படங்களை விட நடிப்பில் மெருகேறியிருக்கிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு விஷயத்திலும் அப்பாவுக்கு கட்டுப்படும் போதும், ஜெனிலியா மீது காதல் கொண்டு அப்பாவின் உத்தரவை ஏற்க மறுக்கும் போதும், க்ளைமாக்சில் அப்பாவுக்கு எதிராக பொரியும் போதும் 'சபாஷ்' ரவி ஆகிறார்.

எந்த வேடத்துக்கும் பொருந்திப்போகும் பிரகாஷ் ராஜ், இந்த படத்திலும் தனது யதார்த்தமான நடிப்பில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறார்.

குறும்புப் பெண்ணாக வரும் ஜெனிலியாவுக்கு தமிழில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள சரியான வாய்ப்பு. நன்றாகவே பயன் படுத்திக்கொண்டிருக்கிறார். சில இடங்களில் லூசுப்பெண் போன்ற அவரது மானரிசமும் மனதைக் கொள்ளைக் கொள்கிறது.

ஜெயம் ரவியின் நண்பர்களான சந்தானம், பிரேம்ஜி சத்யன் ஆகியோர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல. ஜெனிலியாவை, ரவியில் வீட்டில் விட்டு விட்டு அவரது அப்பா ஷாயாஜியை பார்த்து பதறும் காட்சிகளில் எம்.எஸ்.பாஸ்கரும் காமெடியில் பாஸாகி விடுகிறார்.

ஜெயம் ரவியின் தாயாக சீதா, அக்காவாக கவுசல்யா, அண்ணி சத்யா, தங்கையாக தேசிகா என எல்லோரது கதாபாத்திரத்துக்கும் ஒரு முத்திரை கொடுத்திருக்கிறார் ராஜா.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல் ரசிக்கவைக்கின்றன. கண்ணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை. இடை இடையே ஏற்படும் சில தொய்வான காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

'சந்தோஷம் சுப்பிரமணியம்'- படம் பார்த்துவிட்டு சந்தோஷமாக வரலாம்!.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
தரகு
யாரடி ‌நீ மோ‌கி‌னி
சண்ட
சி‌‌ங்க‌க்கு‌ட்டி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace