யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
அறை எண் 305 ல் கடவுள்
- எஸ்.சரவணன்
arai en 305 ill kadavul
WD
'கடவுள் உங்கள் முன் தோன்றினால்...?' என்று கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்வியிலிருந்து உதித்திருப்பதே இப்படத்தின் கதை. திரைக்கதை கடவுளின் வருகையை மெய்ப்பித்திருக்கிறது.

வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவில் இருந்து விலகி, கற்பனையை நம்பவைக்க முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. அதில், நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்க வைத்திருப்பதும் சிறப்பு.படம் வெளிவருதற்கு முன், ஹாலிவுட்டில் வெளியான ஜிம் கேரியின் 'ப்ரூஸ் ஆல்மைட்டி'யை தழுவப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வந்திருக்கலாம்.ஆனால், இந்தக் கடவுளைப் படைத்திருப்பது சிம்பு தேவனே.

காபி, காதல், தண்ணீர், வேலை என எது கிடைக்காவிட்டாலும் எப்போதும் கடவுளை வசைபாடும் இரு நண்பர்களான சந்தானம் மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோரை சந்திக்க, அவர்களது மேன்ஷன் அறைக்கு வருகிறார் கடவுள் (பிரகாஷ் ராஜ்).

தாம் கடவுள் என இருவரிடமும் நம்ப வைக்கும் காட்சிகள், சிம்புதேவனின் கற்பனைச் சோறில் ஒரு பருக்கை. 'நான் யாரென்று மூன்றாம் நபருக்குத் தெரியக்கூடாது.அதேபோல், பண உதவியும் செய்யமாட்டேன் என்று சொன்னாலும், அடுத்த ஒன்றிரண்டு சீன்களிலேயே அடுத்தவருக்கும் தெரிவது, பண உதவியும் செய்வது 'கடவுள்' பாத்திரத்தில் நெருடலை உண்டாக்குகிறது.

பின்னர், சராசரி மனிதராக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறபோது, 'கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்...' என்ற பாடல் நினைவுக்கு வந்து, அப்படிப் பிறந்தால் என்னாகும்...? எனத் தேட வைக்கிறது.

சாதாரண மனிதனாக மாறிய கடவுள் பிரகாஷ் ராஜ், கூலி வேலை செய்வதும், பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சந்தானம் - கருப்பை சாதுர்யமாகப் பேசி காப்பாற்றுவதும் என அனைத்துக் காட்சிகளிலும் பிரகாசமாக மின்னுகிறார்.

சந்தானம் - கஞ்சா கருப்பு ஜோடி, கலக்கப் போவது நாங்கள்தான் என்பதை நிரூபித்துள்ளது. எம்.எஸ். பாஸ்கர், இளவரசு,டெல்லி கணேஷ், கடவுளையே காதலிக்கும் மெஸ் ஓனர் ஜோதிர்மயி, கிராமத்துப் பெரியவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் பெரியார்தாசன், மேன்ஷனில் குடியிருக்கும் பெரியவர் வி.எஸ். ராகவன், சந்தானத்தை காதலிக்கும் மதுமிதா அனைவரின் நடிப்பும், பாத்திரமும் கச்சிதம்.

வாழ்க்கையில் உன்னதத்தை ஒரு காட்சியில் உணர்த்தும் வல்லமை, முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் திறன், குறும்பு மேலிடும் வசனம் என பல்வேறு தளங்களிலும் ஜொலிக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன்.அவருக்கு பக்கா வாத்தியமாக மிளிர்கிறது செளந்திரராஜனின் ஒளிப்பதிவு. இசை - தேவலை.

கருத்துச் சொல்வதைக் கடவுள் கொஞ்சம் குறைத்துக்கொண்டிருந்தால், நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

ஆனாலும், எவ்வித அச்சமுமின்றி, ஆனந்தத்தை அடைய 'அறை எண் 305'-கு குழந்தைகள் முதல் இரண்டாவது குழந்தைப் பருவத்தில் இருப்பவர் வரை விஜயம் செய்யலாம்!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாளி - விமர்சனம்
தரகு
யாரடி ‌நீ மோ‌கி‌னி
சண்ட
சி‌‌ங்க‌க்கு‌ட்டி
கண்ணும் கண்ணும்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace