|
| நேபாளி - விமர்சனம் | |
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு அவதாரங்கள் எடுத்து காமுகர்களை தேடி தேடி களை எடுப்பது தான் கதை.
வழக்கமான பழி வாங்கும் படலமான கதையை, மூன்று கூறாக பிரித்து, பரத்துக்கும் மூன்று கெட்டப் அப்கள் கொடுத்து வித்தியாசப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். நடிப்பில் திறமைகளை வெளிப்படுத்தவும், ஆக்சனில் அதிரவைக்கவும் பரத்துக்கு மிகச் சரியான படம் இது. வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள அவர் கடினமாக உழைத்திருப்பது படத்தில் தெரிகிறது.
காதல் மனைவி மீராவுடன் சரசமாடும் போது தென்றலாய் இருக்கும் பரத், காமுகர்களை ஸ்கெட்ச் போட்டு, மிகச் சரியாக தீர்த்துக்கட்டும் போது சூறாவளியாய் மாறுகிறார்.
கம்யூட்டர் இன்ஜினியர், கைதி, நேபாளி என்ற மூன்று கெட் அப்களில் வரும் நன்றாகவே வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
சிறிது இடைவெளிக்கு பின்னர், துறுதுறுப்பான மீராவை திரையில் பார்க்கும் போது உள்ளுக்குள் ஒரு மலர்ச்சி. பரத்துடன் உறவாடும் போது சூடேற்றும் மீரா, காமுகனிடமிருந்து தப்பிக்க தன்னையே மாய்த்துக்கொள்ளும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.
போலீசார் மீது இயக்குனர் துரைக்கு என்ன கோபமோ, காய்ச்சி எடுத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டினாலும், பாடல் காட்சிகளில் சுமார் ரகம்தான். மதியில் ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலம்.
பல வேகத்தடைகளை குறைத்து, இன்னும் உயிரோட்டம் சேர்த்திருக்கலாம்.
நேபாளி - வீரத்துக்கு குறைவில்லை!.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|