|
| தரகு | |
கதா நாயகன், கதா நாயகிகளுக்கே உரிய இலக்கணத்தை உடைத்து, கதா பாத்திரங்களை தேர்வு செய்ததற்காகவே இயக்குனருக்கு வைக்கலாம் ஒரு ஷொட்டு.
கதாநாயகன் சஞ்சய், ரியல் எஸ்டேட் பிஸினஸ் எனக்கூறி கோடி கோடியாக மோசடி செய்கிறார். அவரை காதலிப்பது போல் நடித்து, மனதில் இடம் பிடிக்கிறார் கதாநாயகி டிம்பிள்.
கோடிக்கணக்கான பணத்துடனும், அழகான காதலியுடனும் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக தயாராகும் சஞ்சய்க்கு திடீர் அதிர்ச்சி. காரணம், அவரது பணம் 50 கோடியுடன் அவருக்கு முன்னதாகவே ஜூட் விடுகிறார் கதாநாயகி டிம்பிள்.
ஏமாற்றிய காதலியையும், பறிபோன பணத்தையும் தேடி சஞ்சய் புறப்படுவதும், அவருக்கு டிம்பிள் கண்ணாமூச்சி காட்டுவதும் விறுவிறுப்பை ஏற்றும் திருப்பங்கள்.
இறுதியில் யார், யாரை ஏமாற்றுகிறார் என்பது யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்.
நாயகன், நாயகி இருவருமே புதுமுகங்கள். ஆனால் அவர்கள் ஏற்ற கதா பாத்திரங்களும், விறுவிறுப்பாக நகரும் திரைக்கதையும் அதை மறக்கடிக்கின்றன.
பிறரை ஏமாற்றும்போதும், காதலியிடம் ஏமாறும்போதும் அழகான முகபாவங்களை வெளிப்படுத்துகிறார் சஞ்சய். ஏமாற்றும் கேரக்டரில் அவருக்கே அல்வா கொடுக்கிறார் புதுமுகம் டிம்பிள். ஹோம்லிக்கும், கவர்ச்சிக்கும் ஏற்ற உடல்வாகு. கோடம்பாக்கம் நிச்சயம் இவருக்கு கை கொடுக்கும் என நம்பலாம்.
டிம்பிள் உதவியாளராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி, வழக்கம் போல் காம நெடியுடன் கூடிய காமெடிகளை அள்ளி வீசுகிறார். சிங்கமுத்து கோஷ்டியும் தன் பங்குக்கு சிரிக்கவைக்க முயற்சிக்கிறது.
ராஜன் பி.தேவ், அமைச்சர் வினு சக்ரவர்த்தி, வட்டச் செயலாளர் மகாநதி சங்கர் ஆகியோரும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
பரணியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். காசி விஸ்வாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை. ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு இடை இடையே காணாமல் போவது ஒரு குறை.
'தரகு', நஷ்டமில்லை!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|