|
| யாரடி நீ மோகினி | |
வெட்டியாய் ஊர் சுத்தும் தனுஷின் வாழ்க்கையில், அழகு மோகினியாக நுழைகிறார் நயன். அவர் மீது காதல் கொள்ளும் தனுஷ் வாழ்வில், அதன் பின்னர் ஏற்படும் சுவாரசியமான திருப்பங்கள் கதை.
அரைகுறை ஆங்கிலம் மட்டுமே தெரிந்த சராசரி இளைஞனான தனுஷ், நயனுக்காகவே அவரது கம்பெனியில், அவரிடம் பயிற்சி பெறுபவராக சேருவதும், சிடு சிடு நயனிடம் காதலை வெளிப்படுத்த முடியாமல் அல்லாடுவதும் சுவாரசியமான அம்சங்கள்.
ஒரு கட்டத்தில் தனுஷ் காதலை வெளிப்படுத்த, அதை நிராகரிக்கும் நயனிடம் தூதுபோய் அவமானப்பட்டு உயிர் விடுகிறார் தனுஷின் தந்தை ரகுவரன்.
தந்தை மரணம், காதல் தோல்வி என சோகமாகும் தனுஷ், ஒரு மன ஆறுதலுக்காக நண்பனின் கிராமத்துக்கு செல்ல, அங்கே மணமகளாக நிற்கிறார் நயன்தாரா. அதன் பின் என்ன என்பது 'ஜவ்வு' க்ளைமாக்ஸ். தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய, 'ஆடவரி மாட்லகு அர்த்தலே வேருலே' படத்தின் ரீ-மேக்தான் தமிழில் 'யாரடி நீ மோகினி'.
வெட்டிப்பயல் என்றாலே தனுஷ் என்றாகிவிட்டது. அந்தளவுக்கு அம்சமாக பொருந்துகிறார். இதுதான் இறுதிப்படம் என்று ரகுவரனின் உள்ளுணர்வுக்கு தெரிந்ததோ, என்னவோ அந்த அளவுக்கு அவரது நடிப்பும், இறப்பும் நம்மை பாதிக்கிறது.
கவர்ச்சியாக பார்த்து பார்த்து பழகிப்போனதாலோ என்னவோ, சேலையில் வரும்போதும் கவர்ச்சியாகவே தெரிகிறார் நயன். நடிக்கவும் தெரியும் என்று இதில் நிரூபித்திருக்கிறார்.
சிடு சிடு டீம் லீடராக அவர் உலா வருவதும், தனுஷிடம் கொஞ்சம் கொஞ்சமாக காதலில் விழுவதும், தனுசுக்கு வலைவீசும் தங்கையை கண்டு பதறுவதும் என கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிக்சராக அடித்திருக்கிறார்.
படம் நெடுக காமெடி இழையோடுவது படத்துக்கு ப்ளஸ். ஆனால் கிராமத்து காமெடி காட்சிகள் ரொம்ப ஓவர்.
யவுன் ஷங்கர் இசையில் பாடல்கள் இதம். ரீமிக்ஸ் பாடல் ஓகே ரகம். கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், நெருடல் இல்லாத படத்தொகுப்பும் படத்துக்கு பலம்.
க்ளைமாக்ஸ் காட்சியை 'நறுக்' என முடித்திருந்தால், மோகினி ரசிகர்களை மயக்கியிருப்பாள் !.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|