|
| சண்ட |
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி நடித்திருக்கும் படம் சண்ட.
சொந்த அண்ணனிடம் விடும் சவாலில் ஜெயிப்பதற்காக, மகள் ராகிணியை கிராமத்து அழைத்துக்கு வருகிறார் நதியா. அண்ணன் ஆட்களிடம் மகளை பாதுகாப்பதற்காக ரவுடி சுந்தர்.சியை பாதுகாவலனாக நியமிக்கிறார். '
ஆனால், கல்யாண நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் ஓட்டம் பிடிக்க பாதுகாவலாக இருக்கும் சுந்தர்.சியை மகள் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறார். அதன் பிறகுதான் தெரிகிறது சுந்தர்.சி வேறு யாருமல்ல;தனது அண்ணன் மகன் என்பது.
இதனால் கோபமாகும் நதியா தனது மகளிடமிருந்து சுந்தர்.சியை பிரிக்க போடும் சதித்திட்டங்களும், அதை மிக சாதுர்யமாக சுந்தர்.சி முறியடிப்பதுதான் கதை.
ஆறடி அரிவாளுடன் அறிமுகமாகும் போதே தெரிந்துவிடுகிறது சுந்தர்.சி நல்ல குணம் படைத்த ரவுடி என்பது. வெளிநாட்டு மாப்பிள்ளையை விரட்ட, விவேக்குடன் சேர்ந்து அவர் போடும் திட்டங்களும், அத்தனையும் அவர்களுக்கு எதிராக திரும்புவதும் கல கல காட்சிகள்.
எனினும், ஒரே விதமான கெட்அப்பில், ஒரே விதமான மானரிசத்திலேயே எல்லாம் படங்களிலும் சுந்தர்.சி வருவது சலிப்பை தருகிறது.
நடிப்பில் முத்திரை பதிப்பவர் அழகான அம்மாவாக வரும் நதியாதான். நாயகி கேரக்டரில் வரும் ராகினி, பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக வந்து ஆட்டம் போடுவதோடு சரி. வேறு எதுவும் சொல்கிற மாதிரி இல்லை. நமீதா வரும் காட்சிகளிலும் தியேட்டரில் ஜொள் மழை.
ராஜ்கபூர், ரவிமரியா, காதல் தண்டபாணி எக்கச்சக்கமான வில்லன்கள். ஆளாளுக்கு வந்து கத்திவிட்டு போகிறார்கள்.
காமெடி என்ற பெயரில் அருவெறுப்பான காட்சி அமைப்புகள், மாமியாரை மருமகன் தூக்கிச் செல்வது, வில்லத்தனம் என்ற பெயரில் மருமகனை வெடிகுண்டு வைத்து கொல்ல நினைப்பது என எல்லாமே கொஞ்சம் ஓவர் டோஸ் ரகம்.
'சண்ட' யாருக்கும் பாதகமில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|