யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
சி‌‌ங்க‌க்கு‌ட்டி
- பெரு
Singakutty
WD
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் என்ற ஒரே தகுதியுடன் தமிழ் சினிமாவில் சீறிப்பாய முயற்சித்திருக்கிறார் புதுமுகம் சிவாஜி. ஆனால் வேறு எந்த தகுதியும் முழுமையாக இல்லாததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடுகிறது.

வெட்டியாய் ஊர் சுற்றும் சிவாஜிக்கு, வழக்கம் போல் நாயகி கவுரி முன்ஜால் மீது காதல். பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட, போலீஸ் பயிற்சியை முடித்துவிட்டு வந்து கல்யாணம் செய்வதாக சொல்லிவிட்டு செல்கிறார் சிவாஜி.

போலீஸ் பயிற்சி முடித்து கல்யாண கனவுடன் ஊர் செல்லும் சிவாஜிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவரது தாய், தங்கை மற்றும் காதலியை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டும் முகம் தெரியாத வில்லன், பல்வேறு அலைகழிப்புக்கு பின், கோயிலில் குண்டுவைக்கும்படி சிவாஜிக்கு உத்தரவிடுகிறார்.

அதன்படி, சிவாஜி வைக்கும் வெடித்ததா, அவர் னது காதலி மற்றும் குடும்பத்தினரை காப்பாற்றினாரா என்பது விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.

நடனத்திலும், சண்டை காட்சிகளிலும் சிறப்பாக செய்திருக்கும் புதுமுகம் சிவாஜிக்கு, நடிப்புதான் வரமாட்டேன் என்கிறது. முகம் தெரியாத் வில்லனை நினைத்து கோபத்தில் கொந்தளிக்கும் போதும், காதலியை மீட்க போராடும் போதும் ஓரளவு முகபாவம் காட்டுகிறார். மற்றபடி, நடிப்பில் அவர் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

‌‌வில்லன் உத்தரவை கேட்டு கோயிலில் குண்டுவைப்பது, பின்னர் அவரே அதை எடுப்பது எல்லாம் ரொம்பவும் சினிமாத்தனம்.

நாயகியாக வரும் கவு‌ரி மு‌ஞ்ஜா‌ல் அழகாக இருக்கிறார். பாட‌ல் கா‌ட்‌சிகள‌ி‌ல் கவர்ச்சி காட்டுகிறார். அப்புறம் அவர் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடுகிறார்கள்.

நீண்டநாளைக்கு பிறகு காமெடி கொடி கட்டுவார் விவேக் என்று எதிர்பார்த்தால், ஸாரி... அவரும் ஏமாற்றுகிறார். மாளவிகாவை, வழக்கம் போல் குத்தாட்டத்துக்கு மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு ஹிட் பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் சொதப்பியிருக்கிறார்கள். கன‌ல் க‌ண்ண‌னி‌ன் ச‌ண்டைக் காட்சிகளும், ‌ராஜசேக‌ரி‌ன் கேமராவு‌ம் ஓரளவு படத்துக்கு கைகொடுக்கின்றன. பிர‌ச‌ன்ன சேக‌ரி‌ன் இசை சுமார் ரகம்.

ஒரு கத்துக்குட்டி நடிகரை, சிங்ககுட்டியாக சீறிபாய வைக்கும் முயற்சியில் இயக்குனர் ஏ.வெ‌‌ங்கடே‌‌ஷ் ஏமாற்றம் தருகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கண்ணும் கண்ணும்
ஃ (அக்கு) - விமர்சனம்
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
வெ‌ள்‌ளி‌த்‌திரை
தோட்டா
தூண்டில்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...