யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
கண்ணும் கண்ணும்
- பெரு
kannumkannum
WD
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி தவிக்கும் உணர்வுப் போராட்டமே கதை.

கடிதம் மூலம் காதல் வளர்க்கும் ஜோடி பிரசன்னா- புதுமுகம் உதயதாரா. பார்த்துக் கொள்ளாமலேயே காதல் வளர்ந்து வரும் நிலையில், காதலியை நேரில் பார்க்கும் ஆவலில் குற்றாலம் வருகிறார் பிரசன்னா.

தனது காதலியின் அண்ணன் என்று தெரியாமலேயே, நண்பனின் வீட்டில் தங்குகிறார். திடீரென நண்பன் இறந்துபோக, அவனது இடத்தில் இருந்து குடும்பப் பொறுப்புகளை கவனிக்கிறார்.

சுற்றுலா சென்று விட்டு திரும்பும் நாயகி, அண்ணன் ஸ்தானத்தில் இருப்பவன் தனது காதலன் என்று அறிந்ததும் அதிர்ச்சி டைகிறார். அண்ணன் உறவை ஏற்க முடியாமல் தவிக்கிறார். முடிவு என்ன என்பது உருக்கமான க்ளைமாக்ஸ்.

காதலன் மற்றும் அண்ணன் என இருவேறு குணாதிசயங்களுடன் உதயதாராவை எதிர்கொள்ளும் வேடம் பிரச்சன்னாவுக்கு. கத்தி மேல் நடப்பது போன்ற கதாபாத்திரம். தனது மென்மையான, அமைதியான நடிப்பினால் அதை கச்சிதமாக செய்திருக்கிறார் பிரசன்னா.

புதுமுக உதயதாராவுக்கும் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. அண்ணனின் மறைவுக்காக கதறும்போதும், தனது காதலனே தற்போது அண்ணன் இடத்தில் இருப்பதை அறிந்து உருகும்போது அதை நிரூபிக்கிறார்.

நீளமான காட்சிகள் வந்து அலுப்பு தட்டும் நேரத்தில், வடிவேலுவின் காமெடி வழக்கம்போல் சிரிப்பை வரவழைக்கிறது.
வசீகரிக்கும் வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு இதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் தினா. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கும், மனதுக்கும் இதம் சேர்க்கிறது.

இயக்குனர் மாரிமுத்துவுக்கு இது முதல் படமாம். ஆனால், கதையிலும், காட்சியமைப்பிலும் அவர் காட்டியிருக்கும் நேர்த்தி ரொம்பவே ஆச்சரியப்படுத்துகிறது.

இடைவேளைக்கு பின்னர், காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாக்கி இருந்தால் 'கண்ணும் கண்ணும்' ஒரு காதல் காவியம் ஆகியிருக்கும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஃ (அக்கு) - விமர்சனம்
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
வெ‌ள்‌ளி‌த்‌திரை
தோட்டா
தூண்டில்
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...