யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
ஃ (அக்கு) - விமர்சனம்
- மு.பெரு,மாள்
akku
WD
தனது முதல் படத்திலேயே ஒரு புதிய முயற்சியை செய்து பார்க்க துணிந்திருக்கும், இயக்குனர் மாமணி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

கம்யூட்டர் இன்ஜினியரான அஜய், தீவிரவாதி ரக்சயின் தங்கை ஸ்ரீஜியை காதலிக்கிறார். இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போகும் முயற்சியில் ரக்சயிடம் சிக்குகின்றனர்.

ஏற்கனவே, சென்னை நகரை குண்டுவைத்து அழிக்கும் திட்டத்தில் இருக்கும் ரக்சய், தனது தங்கையின் காதலனான அஜ்யை இதற்கு பயன்படுத்திகொள்ள திட்டமிடுகிறார்.

இதன் மூலம் 'அஜயை கொன்றது மாதிரியும் ஆச்சு, சென்னை நகரை தகர்த்த மாதிரியும் ஆச்சு' என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது அவரது கிரிமினல் பிளான்.

அதன்படி, அஜயின் ஷூவுக்குள் ஒரு வெடிகுண்டை வைத்து, சென்னையின் மையப்பகுதியிலிருந்து அவரை ஓடவிடுகிறார் க்சய். அஜய் எந்த இடத்தில் நிற்கிறாரோ அங்கே குண்டு வெடிப்பது போல் வெடிகுண்டு செட்அப் செய்யப்படுகிறது.

சாவை கையில் பிடித்தபடி என்பார்களே... அதே மாதிரி தனது சாவை காலில் பிடித்துகொண்டு ஓட துவங்குகிறார் அஜய்.

அவரை மீட்பதற்காக காவல் துறையும் முழுவீச்சில் களமிறங்குகிறது. இறுதியில் அஜயின் ஓட்டம் நின்றதா, அவர் காப்பாற்றப்பட்டாரா என்பது விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.

தேவையற்ற பாடல் காட்சிகள், காமெடி காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை தவிர்த்து ஹாலிவுட் ஸ்டைலில் ஒண்ணே முக்கால் மணி நேரம் மட்டுமே ஓடும் படத்தின் இயக்கத்திலும் தெரிகிறது ஹாலிவுட் நேர்த்தி.

காதல் காட்சிகளிலும், மரணத்தை நோக்கி ஓடும்போது நன்றாக செய்திருக்கிறார் அஜய். நாயகி ஸ்ரீஜி அழகாக இருப்பது போலவே அழகாக நடிக்கவும் செய்கிறார். அண்ணணிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பது, காதலனின் நிலை குறித்து பதறுவது என அனுதாபத்தை அள்ளுகிறார்.

உதவி கமிஷனர் ரியாஸ்கான், வெடிகுண்டு நிபுணர் அனுஹாசன் ஆகியோரும் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறார்கள். வில்லன் ரக்சய்க்கு தமிழ் சினிமாவில் சிறப்பாக இடம் காத்திருக்கிறது.

படத்தின் வேகத்துக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது சிட்டிபாபுவின் ஒளிப்பதிவு. சென்னை நகரை சென்னைவாசிகளே இவ்வளவு அழகாக பார்த்திருக்க மாட்டார்கள். தனது காமிரா மூலம் அப்படியே சென்னையை கண்முன் கொண்டுவரும் அவருக்கும் போடலாம் ஒரு சபாஷ்!

படத்துக்கு ஃ (அக்கு) என்ற எழுத்துக்கு பதிலாக வேறு ஒரு நல்ல பெயரை சூட்டியிருந்தால் படத்தின் தலையெழுத்தே மாறியிருக்கும்.

ஃ (அக்கு) - அசத்தல்!

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
வெ‌ள்‌ளி‌த்‌திரை
தோட்டா
தூண்டில்
நெஞ்சத்தைக் கிள்ளாதே
அ‌ஞ்சாதே
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...