|
| வம்புச்சண்ட | |
கதையை பற்றி கவலைப்படாமல், பட எண்ணிக்கையை மட்டுமே மனதில் கொண்டு சத்யராஜ் ஒப்புகொள்ளும் சில படங்களில் இதுவும் ஒன்று.
நேர்மையான தேர்தல் அதிகாரி சத்யராஜூக்கும், ஆளும் கட்சி அரசியல்வாதியான விஜயனுக்கும் மோதல். கள்ள ஓட்டுக்களை சத்யராஜ் தடுத்துவிடுதால், சவால் விட்டபடி சேலை கட்டிக்கொள்ளும் விஜயன் அவமானத்தால் பைத்தியமாகிறார்.
இதனால் கோபமாகும் அவரது அடியாட்கள் சத்யராஜின் மனைவியை கொன்று, சத்யராஜை பைத்தியமாக்குகின்றனர். இதில் தப்பி பிழைக்கும் சத்யராஜின் மகன் உதய்கிரண், விஜயனை பழிவாங்க கிளம்ப, விஜயனின் மகன் ரியாஸ்கான் சத்யராஜை பழிவாங்க புறப்படுகிறார். முடிவு என்ன என்பது விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.
தேர்தல் அதிகாரியாகவும், மனநோயாளியாகவும் இரண்டு காரெக்டருக்கும் இடையே நிறைய வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் சத்யராஜ். ஆளும்கட்சி விஜயனை எதிர்த்து அவர் திட்டம் தீட்டும்போது விறுவிறுப்பை ஏற்றும் சத்யராஜ், மனநோயாளியாக அலையும் காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார்.
நடிக்க கிடைத்த வாய்ப்பை ஓரளவு பயன்படுத்தி கொண்டிருக்கிறார் உதய்கிரண். தியாவை விரட்டி விரட்டி காதலிக்கும் அவர் ஆக்ரோஷமாக சண்டையும் போடுகிறார்.
வழக்கம் போல வந்து கவர்ச்சி காட்டிவிட்டு போகிறார் தியா. ரியாஸ்கானும் தனது பங்களிப்பை பாராட்டும் வகையிலேயே செய்திருக்கிறார்.
டி.இமானின் இசையில் பாடல்கள் ரொம்பவும் சுமார். சண்டைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
ஒரு அழகான கதையையும், சத்யராஜ் போன்ற ஒரு அற்புதமான நடிகரையும் கையில் வைத்துகொண்டு, இயக்குனர் ராஜ்கபூர் திரைக்கதையில் சொதப்பியிருப்பதால், 'வம்புச்சண்ட' ஆர்வத்தை தூண்டவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|