|
| வெள்ளித்திரை | |
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ்ராஜூக்கும், இயக்குனர் விஜிக்கும் முதலில் ஒரு சபாஷ்!
இயக்குனராகும் முயற்சியில் இருக்கும் பிருத்விராஜூம், ஹீரோ கனவில் மிதக்கும் பிரகாஷ்ராஜூம் அறை நண்பர்கள். ஒரு கட்டத்தில் பிருத்விராஜின் கதையை திருடி முன்னணி ஹீரோவாகி விடுகிறார் பிரகாஷ்ராஜ்.
இதனால், சோகமாகும் பிருத்விராஜ்க்கு, நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின்னர் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது, பிரகாஷ்ராஜ்தான் ஹீரோ என்ற நிபந்தனையுடன்!.
திருடிய கதை மூலம் ஜெயித்த பிரகாஷ்ராஜ்க்கும், கதையை திருட்டு கொடுத்ததோடு, அவரிடமே மண்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பிருத்விராஜ்க்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகர போராட்டத்தில், இறுதியில் ஜெயித்தது யார் என்பது க்ளைமாக்ஸ்.
திரையுலகில் உதவி இயக்குனர்களின் ஏக்கங்கள், தியாகங்கள், ஏமாற்றங்களை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் பிருத்விராஜ்.நண்பன் செய்து துரோகத்தை நினைத்து பொருமும் போதும், தோல்வியால் கோபிகாவிடம் கலங்கும் போதும் பிருத்விராஜ் பிரமாதப்படுத்துகிறார்.
படத்தில் எதிர்மறையான கேரக்டர் என்றாலும், நிஜமான நாயகன் பிரகாஷ்ராஜ்தான்.அவரை மையப்படுத்தியே காட்சிகள் நகர்வதோடு, நடிப்பில் பிரகாசிக்க அவருக்கு தான் அதிக வாய்ப்பு!.
ஆரம்ப காட்சிகளில் காமெடி, குணச்சித்திரம் என கலந்துகட்டி அடிக்கும் பிரகாஷ்ராஜ், திருட்டு கதை மூலம் ஜெயித்த பின்னர் பந்தா, தெனாவெட்டு என வித்தியாசமான வில்லத்தனத்தில் மிளிர்கிறார்.
பிரபல நடிகையாக வரும் கோபிகா உதவி இயக்குனரான பிருத்விராஜை காதலிப்பது, சொந்த சகோதரனிடம் சிக்கி தவிப்பது என கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பிரகாஷ்ராஜின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நண்பனாக வரும் முஸ்தபா மற்று சார்லி என அனைத்து கதாபாத்திரங்களுமே தேவையறிந்து பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.
இப்படி படத்தில் பல ப்ளஸ்கள் இருந்தாலும், இடைவேளைக்கு பின்னர் வரும் ஏனோ தானோ காட்சிகள் நெளிய வைக்கின்றன. ஜீ.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். 'உயிரிலே என் உயிரிலே...' மட்டும் ஓகே ரகம்.
மலையாளத்தில் வெளிவந்த 'உதயநானு தாரம்' படத்தை தமிழில் 'வெள்ளித்திரை'யாக ரீமேக் செய்துள்ளனர். மலையாள உ.நா.தா. உடன் ஒப்பிடுகையில், வசனமும், ஒளிப்பதிவும் 'வெள்ளித்திரை'க்கு பலம் சேர்த்துள்ளன.
ஆனால், தமிழ் ரசிகர்களுக்காக ஒரு சில சமரசங்களும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் லாஜிக் மீறல்களும் நெருடலை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, கடைசி காட்சிகளில் பிரகாஷ்ராஜின் ஓவர் ஆக்டிங் அதிகமாகவே உறுத்துகிறது.
ஆனால், உ.நா.தா.வைப் பார்த்திராத தமிழ் ரசிகர்களை 'வெள்ளித்திரை' வெகுவாக வசீகரிக்கும் என்பது உறுதி!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|