|
| தோட்டா | |
ரவுடியை உருவாக்குகிறார் போலீஸ் அதிகாரி; அந்த ரவுடியோ தனது காதலிக்கு போலீஸ் வேலை கிடைக்க பாடுபடுகிறார்! இந்த ஒரு வரிக் கதையை, வழக்கமான 'ரவுடி ஹீரோ - போலீஸ் வில்லன்' திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் செல்வா.
தனது காதலி பிரியாமணிக்கு போலீஸ் வேலை கிடைப்பதற்கு, பலரையும் போட்டுத் தள்ளுகிறார். இறுதியில் ஒருவரைப் போட்டுத் தள்ளியதில், பிரியாமணிக்கு வேலை கிடைக்கிறது. அந்த ஒருவர் யார் எனும் சஸ்பென்சே க்ளைமாக்ஸ்.
ரவுடிசத்தினூடே காதல், சென்டிமென்ட் போன்றவற்றையும் கலந்து வழக்கத்தில் இருந்து பிழறாத படைப்பைக் கொடுத்துள்ளார் இயக்குனர்.
'தோட்டா' எனும் ரவுடி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் ஜீவன். ஆனால் நீளத் தலைமுடி, வழக்கமான உடல் மொழி... இனியேனும் ௦மாற்றம் கொள்ள வேண்டியது ஜீவனுக்கு அவசியம். ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிப்புத் திறனை வெளிப்படுத்த பிரியாமணிக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆனால், அவர் தனது அழகை நன்றாகவே 'வெளி'ப்படுத்தியுள்ளார்.
போலீஸ் கமிஷனராக வரும் சம்பத்குமார், தமிழ் திரைப்படத்தில் காட்டப்படுகிற ரவுடிகளிடம் உள்ள அத்தனை அம்சங்களும் நிறைந்தவர். இப்படி ஒரு கமிஷ்னரின் கதாப்பாத்திரத்தை உருவாக்கியிருப்பது இயக்குனர் கற்பனையின் உச்சம் என்றால், அது மிகையாகாது.
பொம்பள தாதாவாக வலம் வரும் நீபா உள்பட பல கதாப்பாத்திரங்களும், அவ்வப்போது தங்களது குணாதிசயங்களை மாற்றியபடி இருப்பது நெருடலை ஏற்படுத்துக்கிறது. 'தலைவாசல்' விஜய் கதாப்பாத்திரம் மட்டுமே இதில் விதிவிலக்கு.
ப்ரியாமணியை போலீஸ் வேலையில் சேர்க்க மத்திய அமைச்சரின் உயிரை எடுப்பது... ம்... லாஜிக் பற்றி மறந்துகூட யோசிக்காத இயக்குனரின் நம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும்.
பாலமுருகனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்துக்கு ஓரளவு பலம் சேர்த்துள்ளன.
மற்றபடி, உபயோகமில்லாத போலி துப்பாக்கியில் அகப்பட்டுக் கொண்டுள்ளது இந்தத் 'தோட்டா'!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|