|
| தூண்டில் | |
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்' . அதேநேரத்தில், பழி வாங்கும் உத்தியும், அதில் 'வாடகைத் தாய்' விஷயத்தை புகுத்தியிருப்பதும், திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த இயக்குனர் கே.எஸ். அதியமான் எடுத்துக்கொண்ட முயற்சிகள்!
காதலி திவ்யாவைக் கைவிட்டுவிட்டு, சந்தியாவை மணம் முடித்துக்கொள்கிறார் ஷாம். இந்தத் தம்பதியர் வாழ்வில், பழிவாங்கும் வன்மத்துடன் திரிகிறார் திவ்யா.
வெகுளியாக குழைவதாகட்டும், ரெளத்திரத்துடன் சீறுவதாகட்டும், இயலாமையில் குமைவதாகட்டும்... ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார் சந்தியா. சாவித்ரி, ரேவதி வரிசையில் தாராளமாக அவருக்கு ஒரு சிம்மாசனம் தரலாம்.
சினம் கொள்ளவும் முடியாமல், தனது துயரத்தை வெளிப்படுத்தவும் இயலாமல் இருக்கும் சூழலில் ஓர் ஆணின் செய்கைகள் எப்படி இருக்கும் என்பதை, இயல்பு மீறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாம். சந்தியாவையும், ஷாமையும் வாட்டியெடுக்கும் கதாப்பாத்திரத்தில் திவ்யா திகைக்க வைக்கிறார். ரேவதிக்கு அதிக வேலை கொடுக்கப்படவில்லை. விவேக்கின் நகைச்சுவையில் புதுமை இல்லாததால், சிரிப்புக்கும் பஞ்சம்தான்.
மிக எளிமையான ரொமான்டிக் த்ரில்லர் வகையறா படத்துக்கு, வி டி.வி பானியில் எடிட்டிங் செய்திருப்பது மிகுந்த உறுத்தலாகவுள்ளது. ஷாம் தொலைபேசி செய்யும் காட்சியை, குளோசப்பில் இரு வேறு கோணங்களில் ஒரே நேரத்தில் திரையில் காட்டுவது எதற்கு? இப்படி பல காட்சிகளும் காட்டப்படுவது தேவையற்ற முயற்சியே. அதேவேளையில், கவியரசுவின் ஒளிப்பதிவு அழகுணர்ச்சியைக் கூட்டுகிறது.ஆனால், காட்சியமைப்புக்குத் தகுந்த பின்னணி இசை இல்லை.
ஷாம் கதாப்பாத்திரத்தில் சற்று கவனக் குறைவு, பழமை வாய்ந்த க்ளைமாக்ஸுக்கு முந்தையக் காட்சிகள், நெருடல் மிக்க எடிட்டிங் என மைனஸ்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.ஆனால், இயல்பாகவும், அழுத்தமாகவும் படத்துடன் பொருந்திப் போகும் வசனங்களுக்காகவும், தாய்மையின் வலியை சந்தியாவின் வழியாக சிறப்பாக வெளிப்படுத்தியதற்காகவும் அதியமானை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இளமையின் கொந்தளிப்பைக் காட்டிலும், தாய்மையின் தத்தளிப்பு மட்டுமே ரசிகர்களை தூண்டிலில் சிக்கவைக்கிறது!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|