யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
சாது மிரண்டா...
- எஸ்.சரவணன்
Sadhu miranda
FE
மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு!

மத்திய அமைச்சர் துணையுடன் அண்ணன், தம்பி இருவர் வங்கி ஒன்றை கொள்ளை அடிக்கின்றனர். கொள்ளை நடந்த அன்று வங்கி மேனேஜர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார். கொள்ளை அடித்த அண்ணன் அமெரிக்கா சென்றுவிட, தம்பி பணத்துடன் இங்கேயே தங்கிவிடுகிறார்.

அமெரிக்கா சென்ற முக்கியக் கொள்ளைக்காரனான அண்ணனை, எப்படி வரவழைத்து பிரசன்னா தனது பழியைத் தீர்த்துக்கொள்கிறார் என்பதையும், அதற்கான காரணம் உள்ளிட்ட இன்னபிற சஸ்பென்ஸ்களையும் சுவாரஸ்யமான திரைக்கதையால் கொடுக்க முயற்சித்துளளார் இயக்குனர் சித்திக்.

சாதுவாக அறிமுகமாகும் பிரசன்னா, சற்றும் எதிர்பார்க்காத தருணங்களில் தனது ரெளத்திரத்தை வெளிப்படுத்தும்போது த்ரில்லர் வகையறா திரைக்கதைக்கே உரிய தீனியாக இருக்கிறது. மூர்த்தி என்ற நண்பனின் பெயரில் அவர் ஆடும் டெலிஃபோன் விளையாட்டுகளால், அப்பாஸை (வங்கியில் கொள்ளையடித்த அண்ணன்) அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரவழைப்பது நல்ல டெக்னிக்.

அப்பாவியாகவும், அடப்பாவியாகவும் மாறி மாறி தன்னை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தும் பிரசன்னா, நடிப்பில் சிறப்பாக மிரட்டியுள்ளார். கண்களாலேயே டயலாக் பேசும் காவ்யா மாதவனும் படத்துக்கு மிகுந்த பலம் சேர்க்கிறார். அப்பாஸும் தனது நெகட்டிவ் கேரக்டருக்குப் பொருத்தமான வகையில் நடித்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கரின் கூட்டணியில் கருணாஸ், சார்லி, வையாபுரி மற்றும் கோட்டா சீனிவாசன் உள்ளிட்டோரின் காமெடி ரகளை, சித்திக்கின் முதல் தமிழ்ப்படமான 'ஃபிரண்ட்ஸை' நினைவூட்டுகிறது. ஆனால், இயல்பு மீறாத நகைச்சுவைக் காட்சிகளாலேயே சிரிக்க வைத்திருப்பது பாரட்டுக்குரியதே. ஆனால், த்ரில்லராக நகரும் கதையில் காமெடிக் காட்சிகள் ஸ்பீட் ப்ரேக்காகவே இருக்கின்றன.

இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுக்காத நிலையில், குற்றங்கள் பல நடக்கும் கதையில் போலீஸுக்கு முழு விடுமுறை அளித்திருப்பது, ஒரு கட்டத்தில் சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் ரசிகர்களுக்குப் புரிய ஆரம்பித்த பிறகும்கூட, அதை மேலும் இழுத்திருப்பது என பற்பல மைன்ஸ்களை அடுக்கலாம்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? த்ரில்லிங்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்பன போன்ற குழப்பமின்றி, திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால், சாது... மிரட்டியிருப்பான்!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
த‌ங்க‌ம்
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
பீமா
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
க‌ல்லூ‌ரி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace